‘செய்தித்தாள்’ ஒரு செய்தியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் மார்ச் 5 முதல் திரைக்கு வருகிறது

0
IMG-20210217-WA0029-1170x749

டேக்கன் என்டர்டெய்ன்மென்ட்  சார்பில் பிரியங்கா.P தயாரிப்பில் பஞ்ச் பரத்  இயக்கத்தில் உருவாகும் படம் ‘செய்தித்தாள்’.செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் இந்த செய்தித்தாள். செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகை துறையை இந்தப்படம் நிச்சயம் கௌரவ படுத்தும்.

இப்படத்தின் படப்பிடிப்பு மேட்டூர், சென்னை மற்றும் ஊட்டியில் நடைபெற்றது.
இப்படத்தில் சதன், யோகி, பிரைட் நஜீர், துரை ஆகிய நான்கு  கதாநாயகர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ ஸ்ரீ , பாலா அம்பிகா மற்றும் இந்த படத்தின் வில்லனாக  பஞ்ச் பரத் நடித்துள்ளார்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு வேல், இசை தஷி, படத்தொகுப்பு லக்ஷ்மணன்,  நடனம் அக்ஷயா ஆனந்த் மற்றும் ஈஸ்வர பாபு.
பஞ்ச் பரத் இயக்குனராக இந்திர சேனா மற்றும் நீ தானா அவன் என இரு படங்களை இயக்கியுள்ளார்  மூன்றாவது படைப்பாக இந்த ‘செய்தித்தாள்’
பிரபல நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் , நடிகர் பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசன் அவர்களை திரையில் அறிமுகப்படுத்தியவர் .
இப்படம் மார்ச் 5 முதல் திரைக்கு வருகிறது .

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *