கல்யாண் ஜூவல்லர்ஸின் இரண்டு பிரம்மாண்ட புதிய விற்பனை நிலையங்களை திரைப்பட நட்சத்திரங்கள் பிரபு மற்றும் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி சென்னையில் துவங்கி வைத்தனர்!

a2c138f1-32f6-4d8f-9b04-9a13079c898c

சென்னை,08 டிசம்பர்2025:

இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான கல்யாண் ஜூவல்லர்ஸ், இன்று சென்னையில் ஈ.சி.ஆர் மற்றும் ரெட் ஹில்ஸ் ஆகிய இரண்டு இடங்களில் தனது புதிய விற்பனை நிலையங்களைத் தொடங்கியுள்ளது.

பிரபல திரைப்பட நட்சத்திரங்களான பிரபு கணேசன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இந்த புதிய கிளைகளைத் திறந்து வைத்தனர். சென்னைப் பகுதியில் கல்யாண் ஜூவல்லர்ஸ் தனது வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த புதிய கிளைகளைத் தொடங்கியிருக்கிறது.

இந்த விற்பனை நிலையங்களில் கல்யாண் ஜுவல்லர்ஸின் மிக பிரபலமான பிராண்ட்களான முகூரத் திருமண நகை வரிசை முத்ரா கையால் செய்யப்பட்ட பழங்கால பாணியிலான நகைகள்

நிமாஹ் கோயில் நகைகள்
உள்ளிட்ட எண்ணற்ற பிரத்தியேக வடிவமைப்புகளிலான நகைகள் வாடிக்கையாளர்களின் பார்வைக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன. உலகத்தரம் வாய்ந்த ஆடம்பரமான சூழலில், மேம்பட்ட வசதிகளுடன் கூடிய இந்த விற்பனை நிலையங்களில், கல்யாண் ஜுவல்லர்ஸின் பல்வேறு பிராண்ட்களின் நகை வடிவமைப்புகள் இடம்பெற்றிருப்பதால், இப்பகுதி மக்களுக்கு ஒரு மிகச்சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விற்பனை நிலையங்களில் தொடக்க விழாவில் பேசிய நடிகர் பிரபு மற்றும் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர், “கல்யாண் ஜூவல்லர்ஸின் இந்த புதிய கிளை திறப்பு விழாவில் பங்கேற்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலனை எப்போதும் முதன்மையாகக் கொண்டு செயல்படும் ஒரு நிறுவனத்தோடு இணைந்திருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கல்யாண் ஜூவல்லர்ஸின் உலகத்தரம் வாய்ந்த சேவை மற்றும் அற்புதமான நகை தொகுப்புகளைப் பாராட்டும் வகையில் சென்னை மக்கள் தங்களுடைய அன்பையும் ஆதரவையும் நிச்சயம் அளிப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று தெரிவித்தனர்.

இது குறித்து கல்யாண் ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் . ரமேஷ் கல்யாணராமன்

பேசுகையில், “சென்னையில் திறக்கப்பட்டுள்ள எங்களது இந்த இரண்டு புதிய கிளைகள் மூலம், வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைக்கேற்ப ஒரு முழுமையான ஷாப்பிங் தளத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை எனும் எங்களின் நிலையான கொள்கைகளிலிருந்து மாறாமல், உலகத்தரம் வாய்ந்த சிறப்பான சூழலையும், வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சேவையையும் மக்களுக்கு வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்றார்.

About Author