மீனம்பாக்கம்லயன்ஸ்கிளப்மற்றும் மிஷன் குருதேவாபவா இணைந்துவழங்கிய வித்யா சேவா சம்மான்’ விருதுகள் 2025
லயன்ஸ் கிளப் ஆஃப் மீனம்பாக்கம் மற்றும் மிஷன்குருதேவாபவாஆகியஇருஅமைப்புகளும் ஒருங்கிணைந்து கோபாலபுரத்திலுள்ள D.A.V. மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வித்யா சவா சம்மான் விருதுகள் 2025 நிகழ்வை முதன் முறையாக நடத்தின.மிகசிறப்பாகநடைபெற்ற இவ்விழாவில்,பள்ளிமாணவர்களின்வாழ்க்கையிலும் மற்றும் கல்வி சூழலமைப்பிலும் நீடித்து நிலைக்கும் தாக்கத்தை செய்திருக்கும் 20ஆசிரியர்களுக்குவிருதுகள்வழங்கப்பட்டன.
தமிழ்நாடுமாநிலஅரசின்முன்னாள்தலைமைச் செயலர் டாக்டர். இறை அன்பு இவ்விழாவில் கலந்து கொண்டு சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்; மேலும் “நாட்டின் வளர்ச்சி கட்டமைப்பில் ஆசிரியரின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கற்பித்தலில்உள்ளபெருமையைமேம்படுத்துகிற மற்றும் ஆசிரியர்களை கவுரவித்து பெருமைப்படுத்துகிற” இந்த விருதுகள் திட்டத்தை செயல்படுத்தியதை அவர் மனமார பாராட்டினார்.பிரபல கல்வியாளரான வித்யா ஷங்கர்சக்ரவர்த்தி,“மகிழ்ச்சியானஆசிரியர் கள்,மகிழ்ச்சியான வகுப்பறைகள் என்ற தலைப்பில் ஒரு அமர்வை மிகச்சிறப்பாக நடத்தினார். இவ்விழாவில் உரையாற்றிய DAV பள்ளிகள் குழுமத்தின் இயக்குநர் சாந்தி அசோகன், விருதுகள் வழங்கப்பட்ட சிறந்த ஆசிரியர்களை பாராட்டி கவுரவித்தார்.
மாணாக்கர்களுக்கும், பள்ளிகளுக்கும் மற்றும் கல்வி சூழலமைப்பிற்கும் மிக நேர்த்தியான பங்களிப்பின்மூலம்மேம்பாட்டை சாத்தியமாக்கியதற்காக பள்ளி தாளாளர்கள் மற்றும்தலைமைஆசிரியர்களால்விருதுக் கானசிறந்தஆசிரியர்கள்தேர்வுசெய்யப் பட்டிருந்தனர். விருது பெற்ற ஒவ்வொரு ஆசிரியருக்கும் பாராட்டு சான்றிதழும், ₹21,000 ரொக்கப்பரிசும்இவ்விழாவில்வழங்கப்பட்டன.
அதிக ஊதியம் வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி அப்பணிகளை துறந்து பள்ளிகளில் கல்விப் பணி ஆற்ற தன்னை அர்ப்பணித்திருக்கும் ஆசிரியர்களை குறித்த ஒரு சிறியஆவணப்படம்இந்நிகழ்வின் போது வெளியிடப்பட்டது. கல்விப் பணி மீது ஆர்வத்தால் சுயநலமற்ற சேவையாற்ற வேண்டுமென்ற அவர்களது அர்ப்பணிப்பு உணர்வை இந்த குறும்படம் நேர்த்தியாக சித்தரித்தது. என்றார்
