இந்தியாவின் சமகால இளம் கலைஞர்களின் படைப்பு கண்காட்சி ​லலித் கலா அகாடமியில் காண்டம்பரி நவ் என்ற தலைப்பில் நடைபெறுகிறது.

96baf2fe-687c-4490-a9c8-20eb070842e6

இந்தியாவின் சமகால இளம் கலைஞர்களின் படைப்பு கண்காட்சி ​லலித் கலா அகாடமியில் காண்டம்பரி நவ் என்ற தலைப்பில் நடைபெறுகிறது.

இக்காட்சியில் மும்பையின் கெமோல்ட் பிரெஸ்காட் ரோடு, சாட்டர்ஜி & லால், டில்லியின் வடேரா ஆர்ட் கேலரி, கோல்கட்டாவின் எக்ஸ்பெரிமெண்டர், மற்றும் சென்னையின் அஷ்விதா’ஸ் ஆகிய 5 கலைக்கூடங்கள் இணைந்து இந்தியாவின் சமகாலக் கலையின் மிகப்பெரிய கண்காட்சியை நடத்தி வருகிறது 37 முக்கியமான இளம் கலைஞர்களின் படைப்புகளை உள்ளடக்கிய இந்தக் கண்காட்சி, இந்தியாவின் சமகால கலைகளின் மேம்படுத்தவும் ஊக்குவிக் கவும் ஒரு தளத்தை அமைத்துள்ளது. ​

இது குறித்து அஸ்விதா கேலரியின் அஸ்வின் ராஜகோபாலன் தெரிவித்ததாவது:காண்டெம் பரரி நவ், தனித்துவம்மிக்க ஐந்து கேலரிகளின் கலை கண்ணோட்டம் மற்றும் அணு குமுறைகளை ஒருசேர சந்திக்கும் அரிய இடமாகும். ​ இது ஒரு கண்காட்சி மட்டுமல்ல – இது இந்திய சமகால கலை தளத்திற்க்கு ஒரு சிறந்த அறிமுகமாகும்.மற்றும் கலை உலகில் பழம்பெரும் சேகரிப்பாளர்களுக்கு சமகாலகலையின் செம்மையான படைப்புகளை ஓரிடத்தில் தொகுத்துக்கொள்ளும் அரியவாய்ப்பாகும். இந்தக்கண்காட்சியில் உள்ள படைப்புகள், ஓவியம், சிற்பம், புகைப்படம், துணி, நிறுவல் மற்றும் கலந்துபட்டவை என்று பல ஊடகங்களால் ஆனவை. மேலும், சுயம், பாலினம் அடையாளம் குறித்த உணர்வுகள், சுற்றுச்சூழல் மாற்றம், நகரச்சூழல் மாற்றம், அரசியல் பார்வைகள் என்று பல தளங்களில் படைக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த கண்காட்சி செப்டம்பர் 17 ஆம் தேதி வரைக்கும் உள்ளது. பார்வையாவையாளர்க்கு அனுமதி இலவசம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்றார்

About Author