பள்ளியின் குழந்தைகளுக்கு இயற்கையை நேசித்தல், பசுமையை பாதுகாத்தல் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்”
லிட்டில் பெர்ரீஸ் மாண்டோசரி சிறுவர் பள்ளியின் குழந்தைகளுக்கு சிறுவயது முதல் இயற்கையை நேசித்தல், பசுமையை பாதுகாத்தல் போன்ற உயரிய சிந்தனை மனதில் பதியும் வகையில் மரம் வளர்த்தல் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை கண்ணப்பர் திடலில் நடத்தியது.
இந்நிகழ்வை கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெறும் வகையில்
மர வடிவிலான மிகப்பெரிய புதிர் கலைப்படைப்பு, குழந்தைகளால் வரையப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டது. இந்நிகழ்வை கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்து அதற்கான சான்றிதழ்களும் பெற்றனர்.
லிட்டில் பெர்ரீஸ் மாண்டோசரி பள்ளியின் இயக்குநர் ராதிகா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
மரம் வளர்த்தல், பசுமையை பாதுகாத்தல் என்பது எதிர்கால உலகிற்கு தேவையான ஒன்று.
இதை மாண்டசோரி பள்ளிக் குழந்தைகளின் வாழ்வியலோடு சேரும் வண்ணம் மரங்களை பற்றிய அறிவை வளர்த்து கொள்ள இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் இதில் புரசைவாக்கம், செளகார்பேட்டை, வியாசர்பாடி
லிட்டில் பெர்ரீஸ் மாண்டசேரி பள்ளி குழந்தைகளும் , அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
282 வண்ண புதிர் அட்டைகளை கொண்டு பள்ளி 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் , பெற்றோர் இணைந்து மரம் உருவாக்கும் புதிர் ஆட்டத்தை நடத்தி தீர்வை கொடுத்து சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர் .
இதற்கான காலாம் வேர்ல்ட் ரிக்கார்ட் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வு இயற்கையை நேசிப்போம், பசுமையை காப்போம் என்ற வாக்கு
குழந்தைகளுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் என்றார்.
