சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையான‘தி ஐ பவுண்டேஷன், தனது 25வது மையத்தைத் சென்னையில் திறந்தது.

433bd6a3-c059-4555-99fd-55eda30a13fd

சென்னை, ஜூலை 2025: கோயம்புத்தூரை தலைமை இடமாகக் கொண்டு, கண் மருத்துவத்தில் தலைசிறந்து விளங்கும், தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை தனது 25வது கிளை மருத்துவமனையை சென்னையில், ஜூலை 06ஆம் தேதியன்று தொடங்கி உள்ளது.

உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவத்தை, அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் மனித நேயத்துடன் வழங்கும் நோக்கத்தில், தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் தனது கிளைகளை நிறுவி சேவை அளித்து வருகின்றது. இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் தற்பொழுது சென்னையில் தொடங்கியுள்ளது.

தி ஐ பவுண்டேஷன், சென்னை கண் மருத்துவமனையை மாண்புமிகு திரு.மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தமிழ்நாடு அவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 6, 2025 அன்று திறந்து வைத்தார். மேலும் இவருடன் சிறப்பு விருந்தினராக பத்ம பூஷன் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி அவர்கள், தலைவர் – நல்லி சில்க்ஸ் மற்றும் டாக்டர் பார்த்த பிஸ்வாஸ், தலைவர் – அகில இந்திய கண் மருத்துவ சங்கம் மற்றும் டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன், திரை பின்னணி மற்றும் கர்நாடக சங்கீத பாடகர், கலந்து கொண்டனர்

இம்மருத்துவமனை வடபழனி, நெக்ஸஸ் விஜயா மால் எதிரில், சுமார் 32000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 5 அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அறுவை சிகிச்சை அறைகள், 12 மருத்துவ ஆலோசனை அறைகள், 7 பரிசோதனை அறைகள், 24 ஆப்டோமெட்ரி அறைகள் (அறிவியல் சாதனங்கள் கொண்டு கண்களை சோதனை செய்யும் இடம்), நவீன கண்கண்ணாடி சேவை, மருந்தகம், அனைத்து வசதிகள் கொண்ட 10 நோயாளிகள் தங்கும் அறைகள் மற்றும் 25+ பகல் நேர நோயாளிகளின் ஓய்வு அறைகள் மற்றும் கார் பார்க்கிங் என அனைத்து வசதிகளும் உள்ளன.

தி ஐ ஃபவுண்டேஷனின் தலைவர் டாக்டர். டி. ராமமூர்த்தி கூறுகையில், தேசிய அளவில் தரமான கண் மருத்துவத்திற்கு ஒர் பூர்த்தி செய்யப்படாத தேவை இருந்து கொண்டே இருப்பதாகவும், சென்னை அதற்கு விதிவிலக்கு இல்லை என்றும் கூறினார். மேலும் அவர், 130க்கும் மேற்பட்ட திறமையான கண் மருத்துவர்கள், சுமார் 300 அனுபவமிக்க ஆப்டோமெட்ரிஸ்ட், மற்றும் 1000க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களைக் கொண்டு செயல்படுவதே தி ஐ ஃபவுண்டேஷனின் உண்மையான வலிமை என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “சென்னையில் அமைந்துள்ள எங்கள் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள நகராட்சி பகுதி மக்களுக்கு ஆரம்பகால சிறப்புச் சலுகையாக இரண்டு மாதத்திற்கு இலவச முழு கண்பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்க உள்ளது”, என்றார்.

“கண் பராமரிப்பில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றத்தை அறிமுகப்படுத்துவதை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம் – ஜான்சன் & ஜான்சனின் SILK தொழில்நுட்பம், இப்போது சென்னையில் உள்ள எங்கள் வடபழனி மையத்தில் செயல்படுத்தப்படுகிறது. இது, தமிழ்நாட்டில் SILK தொழில்நுட்பத்தின் முதல் நிறுவலைக் குறிக்கிறது. கார்னியாவை துல்லியமாக மறுவடிவமைப்பதன் மூலம் மயோபியா, ஆஸ்டிக்மாடிசம் மற்றும் பிற ஒளிவிலகல் பிழைகளை சரிசெய்வதற்கான அதிநவீன நுண்துளை அறுவை சிகிச்சை மூலம், தீர்வை SILK வழங்குகிறது”, என்று தி ஐ ஃபவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷ்ரேயாஸ் ராமமூர்த்தி கூறினார்.

“இந்த தொழில்நுட்பத்தை தனித்துவமாகக் கொண்டிருப்பது, மற்ற லேசர் செயல்முறைகளுடன் பொதுவாக தொடர்புடைய உலர்ந்த கண் அறிகுறிகள் இல்லாமல் நோயாளிகள் அடுத்த நாளே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். மிக முக்கியமாக, SILK முந்தைய முறைகளைவிட கண்ணின் மேற்பரப்பின் கட்டமைப்பை சிறப்பாக பாதுகாத்து, கண் பலவீனமடைவதற்கான ஆபத்தை குறைக்கிறது. உலகளாவிய தரத்திற்கேற்ப கண் பராமரிப்பை வழங்குவதற்கான எங்கள் உறுதிமொழியை வலுப்படுத்தி, இந்த முன்னணி தீர்வை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்”, என்று டாக்டர் ஷ்ரேயாஸ் ராமமூர்த்தி மேலும் கூறினார்.

About Author