ரோட்டரி சங்கம் சார்பாக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.

6790f296-fed9-4236-b21f-71905f033cc6

சென்னை, மார்ச்,06,
ரோட்டரி சங்கம் (Districk 3234) சார்பாக இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மீண்டும் அவர்
சி .எஸ்.கே ஐ பி எல் அணிக்காக ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 619 என்ற இலக்கில் அதிக விக்கெட்டுகளை எடுத்த அணில் கும்ப்ளேக்கு பிறகு 537 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் 2 வது இடம் பிடித்ததும் வரலாற்று சாதனை என்ற நோக்கில் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அப்போது அஸ்வின் பேசியதாவது:- கிரிக்கெட் விளையாட்டுக்காக எனக்கு அளித்த இந்த விருது வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கிரிக்கெட்டில் நான் செய்த சாதனை நிலையான ஒன்றல்ல. இதை முறியடிக்க வேறொரு வீரர் இப்போதே உருவாகியிருப்பார். இச்சாதனை விருதுக்கு தகுதியை அனைத்தும் நம் சொந்த சென்னை மைதானத்தில் கற்றுத் தேர்ந்தேன் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகின்றேன். கடந்த 10 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியான முறையில் பயன் படுத்துவேன்.

நான் சில சிறந்த பாடங்களைக் சிஎஸ்கே வில் தான் கற்றுக்கொண்டேன். அன்று தொடர்ந்த என் பயணம் இன்று இதே இடத்தில் வந்து முடிவடைகிறது. இங்கு வந்த பிறகு என் சொந்த வீட்டை வந்தடைந்தை போன்ற உணர்வோடு இருக்கிறேன்என்று தெரிவித்தார்.

.

About Author