இயேசு அழைக்கிறார் ஜெபகோபுர வளாகத்தில் ஈஸ்டர் தின விழா

E5203FC1-936E-4293-9FBE-87ADE9758E99

சென்னை  வானகரத்தில் அமைந்துள்ள இயேசு அழைக்கிறார் ஜெபகோபுர வளாகத்தில் ஈஸ்டர் தின விழாவை  முன்னிட்டு சிறப்பு  பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான மக்கள்  கலந்துகொண்டனர் . பின்னர் சகோதரர்.சாமுவேல் தினகரன் மற்றும் சகோதரி ஸ்டெல்லா ரமோலா இவர்களின் எழுச்சி நிறைந்த பாடல்கள் மக்களை பக்தி பரவசத்திற்கு அழைத்துசென்றது . மேலும்  இங்கு நடைப்பெற்ற குருநாடகம் மக்களின் சிந்தனையை தூண்டும் விதமாக அமைந்தது . டாக்டர்.பால்தினகரன் அவர்கள் மரணமான சாபமான வாழ்க்கையை அருள்நாதர் இயேசு தன் தோல்மேல் சுமந்து , வெற்றி பெற்று உயிர்த்தார் . அந்த உயிர்ப்பிக்கும் பாதையில் மக்களை வழிநடத்துவார் என்று உணர்ச்சிமிகு செய்தி வழங்கினார் . செய்தியும் பிரார்த்தனையும் மக்களை பக்தி பரவசப்படுத்தியது . தாங்கள் பாவத்திலிருந்தும் , சாபத்திலிருந்தும் விடுபட்டதாக உணர்ந்ததை மக்கள் வெளிப்படுத்தினர் . இந்த கூட்டத்தில் திருமதி . ஸ்டெல்லா தினகரன் , சகோதரி இவாஞ்சலின் பால் தினகரன் மற்றும் டாக்டர் ஷில்பா தினகரன் , மற்றும் சபை போதகர்கள் முக்கியத் தலைவர்கள் பொது மக்கள்  என பலரும் கலந்துகொண்டனர் .

About Author