தியாகராய நகர் மேற்கு பகுதி 133 அ வட்ட சார்பில் 570 மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு தொடர்ச்சியாக
தியாகராயநகர் மேற்கு பகுதி
133(அ)வது வட்ட செயலாளர் பி.மாரி தலைமையில்
570 மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேட்லி சாலை சுரங்கபாதை
அருகில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் மயிலை த.வேலு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர் நிகழ்ச்சியில் மேற்கு பகுதி செயலாளரும் 133வது வார்டு மாமன்ற உறுப்பினருமான கே.ஏழுமலை
தலைமை செயற்குழு உறுப்பினர் கோ.சு மணி
ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் வட்ட நிர்வாகிகள் பகுதி பிரதிநிதிகள, அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ,கழக செயல்வீரர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மாவட்டச் செயலாளர் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது முதல்வர் தமிழக மகளிர்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களையும் நல்ல செயல்களையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்ட தொடரில் மகளிர்க்கு சலுகைகளும் வழங்கப்பட உள்ளது என்று கூறினார்