தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து

0
FD3FA0C2-8503-44DC-965A-1807243DA3F8

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் நாடும் – ஏடும் – நாளும் போற்றும் வகையில் தமிழ்நாட்டை தங்களின் சீரிய தலைமையின் கீழ் அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக மாற்றியும், குறிப்பாக கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் எண்ணற்ற திட்டங்களை வகுத்துத்தந்து, செம்மைபடுத்தி சீர்தூக்கியும், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை, தமிழ்நாடு வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளில் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி, போலி ஆவணம் ரத்து சட்டம், தானியங்கி முறையில் பட்டா மாறுதல் உள்ளிட்ட, எண்ணற்ற மக்களுக்கு பயனுள்ள பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி, இந்தியாவிலேயே முதன்மையான முதல்வராக நாளும் செயலாற்றும் தரணி போற்றும் தலைமகனே..
தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வரே!
தாங்கள் நலமும், வளமும், நாளும் பெற்று, நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என
உம்மை உளமாற வாழ்த்தி மகிழ்கிறேன் என FAIRA தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *