சிநேகம் அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறைகளில் சாதித்து வருபவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி
சிநேகம் அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறைகளில் சாதித்து வருபவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.இதில் ஏ.டி.எஸ்.பி.மகேஸ்வரி,சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளையபெருமாள் உள்ளிட்ட எட்டு பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.*
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் என்னை போல் உள்ளவர்களுக்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் செயல்படுகிறேன்…
அப்பா இல்லாத குழந்தைகள், கல்வி பயில முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு எங்களின் அறக்கட்டளை சார்பில் உதவி செய்யப்பட்டு வருகிறோம்.
சமூகத்தில் மக்களுக்காக நின்று குரல் கொடுக்கும் அறக்கட்டளை.
தமிழ்நாட்டில் மரங்களில் ஆணி அடிக்க கூடாது என்று கூறி அது தொடர்பாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றிபெற்று தீர்வு காண்டது சிநேகம் அறக்கட்டளை. அப்படி இருக்கும் போது எங்களின் அறக்கட்டளை மீது தவறான கருத்துக்களை கூறுகிறார்கள்.
அவர் (சிநேகன் பாடல் ஆசிரியர்) வைத்திருக்கும் அறக்கட்டளை வேறு நாங்கள் வைத்திருக்கும் அறக்கட்டளை வேறு ஒரு போன் காலில் முடிய வேண்டிய விஷயம் ஆனால் இதனை காவல் நிலைய வரை கொண்டு சென்று விட்டார். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண் மீது குற்றம் சட்டுகிறார்கள். சிநேகம் வங்கி கணக்கு அனைத்தும் ஒப்பனாக இருக்கிறது. ஆனால் எங்கள் மீது தொடர்ந்த வழக்கை நடத்தி கொண்டு இருக்கிறோம். இதனை சும்மா விட போவதில்லை என்றார்.
இடம் : சென்னை சேப்பாக்கம் சென்னை நிருபர்கள் சங்கம்.