சமூக மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் 61 வது அமர்வு
(UNCSocD 61) -மெய்நிகர் துணை நிகழ்வு

0
936901CB-382D-414D-A30E-18277E35B434

சமூக மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் 61 வது அமர்வு
(UNCSocD 61) -மெய்நிகர் துணை நிகழ்வு. நியூயார்க் H.Q
சென்னையில் நடைபெற்றது
நிகழ்ச்சி
ஏற்பாடு செய்தது: உழைக்கும் மகளிர் சங்கம் இந்தியா
பெண்களுக்கான இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் லிட்
உழைக்கும் மகளிர் சங்கம் மற்றும் இந்திய கூட்டுறவு மகளிர் இணைப்பு
மையமானது ஐக்கிய நாடுகள் சபையின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 61′
வது (UNCSocD 61) அமர்வில் உலக அளவில் ஒரு துணை நிகழ்ச்சியை
நடத்துவதற்கான பெருமையை பெற்ற ஒரே கூட்டுறவு நிறுவனம் ஆகும். இந்
நிகழ்வு 2030 உலகளாவிய நிகழ்நிரலை நோக்கி உற்பத்தி திறனை
மேம்படுத்துவதில், சமத்துவமின்மையை எதிர்ப்பதில் கூட்டுறவு நிறுவனங்களில்
இளம் பெண்களின் பங்கு ” என்ற தலைப்பில் சென்னை தலைமையகத்தில் நடைபெற்றது.
64
UN ECOSOC அமைப்பினரால் 27 ஆண்டுகளில் 2 வது முறையாக தொடர்ந்து
தேர்தெடுக்கப்பட்ட ஒரே கூட்டுறவு நிறுவனமாக இந்திய மகளிர் கூட்டுறவு
இணைப்பு மையம் லிட். திகழ்கிறது. இந்நிகழ்வு 8 நாட்களில் 57 நிகழ்வுகளுடன்
அனைத்துலக மக்களும் பார்த்து ரசிக்கும் வகையில் அமைந்தது.
உழைக்கும் மகளிர் மன்றம் (இந்தியா) மற்றும் இந்திய மகளிர் கூட்டுறவு
இணைப்பு மையம் ஆகியவை தென்னிந்தியாவிலேயே ( தமிழ்நாடு . ஆந்திரா
தெலுங்கானா மற்றும் கர்நாடகா ) 620000 முறைசாரா துறை ஏழைப் பெண்கள்.
சுமார் 275 தொழில்களை செய்யக்கூடியவர்களை உறுப்பினர்களாகக்
கொண்டுள்ளது. இவர்களுக்கு சுமார் 5 கோடிகளுக்கு மேல் கடன் வழங்குவதன்
மூலமும், கடன் குழுக்கள் மூலம் அவர்களை ஒழுங்கமைத்து ஆலோசனை
வழங்குதல், பாலின விழிப்புணர்வு திறன்கள், சேமிப்பு.காலநிலை மாற்ற தீர்வுகளில்
பயிற்சி அளிப்பதன் மூலமும். இரண்டாம் தலைமுறையில் பாரம்பரியத்தை
தொடர்வதன் மூலமும்
பெண்கள் பாரம்பரிய திறமையை கற்றுக்
கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தி சொத்துக்கள்,
முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குகிறார்கள். இளம் ஏழை மற்றும்
கல்வியறிவு பெற்ற பெண்களும் வணிகம் மற்றும் குடும்பங்களை வழி நடத்தவும்
நிர்வகிக்கவும் முடியும் என்பதை நிரூபிக்கிறார்கள்.
இந்திய கூட்டுறவு மகளிர் இணைப்பு மைய தலைவி அவர்கள் தனது வரவேற்பு
உரையில் நிகழ்ச்சியின் கருப்பொருளை சுட்டிக்காட்டினார். ஏழ்மையான
பின்னனியில் இருந்து வரும் இளம் பெண்கள் வறுமை, கல்வியறிவு இன்மை
போன்ற காரணங்களாலும். திருமணம் மற்றும் குழந்தைப்பேறு போன்ற வாழ்க்கை
சுழற்சி சிரமங்களை அனுபவிப்பதாலும் முறையான வாழ்க்கையை
ஆண்டுகளுக்குப் பிறகு தாமதமாக தொடங்குகிறார்கள்.

திருமதி. ஃபெய்த் வயுவா, ஆப்பிரிக்கா We Effect பிரதிநிதி அவர்கள்
கூட்டுறவு நிறுவனங்களில் பெண்கள் சிறுவர்கள்
பங்களிப்பை
முன்னிலைப்படுத்தினார்.
செய்வதற்கான
இடைவெளியை
மற்றும் ஆண்கள் சமமான
அனுகுமுறையை
செய்ய.
நிவர்த்தி
முடிவெடுக்கும் விஷயத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஈடுபடுத்தல் சிறப்பாக
இருக்கும் என கூறினார். வி.எபக்ட் திட்டத்தின் “மாற்றத்திற்கான தலைமை
குறித்தும், பெண் விவசாயிகளின் நிதி பற்றாக்குறை குறித்தும் விரிவாக கூறினார்.
திரு. ஹிரோஃபுமி கோபயாஷி, நிர்வாக இயக்குனர், ஆசியாவில்
வேளாண்மை கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனம் () IDACA) அவர்கள்
இந்நிகழ்சிக்காக டாக்டர்.நந்தினி ஆசாத் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தி
பாராட்டினார். பின்னர் அவர் ஆசிய நாடுகளில் பாலின இடைவெளி குறியீடு
(GGI) மற்றும் கூட்டுறவில் உயர்மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய
விவரங்களைச் சேர்த்தார். பொருளாதாரம், கல்வி, மற்றும் அரசியலில் பெண்களின்
வளர்ச்சி 146 நாடுகளில் ஜப்பான் 116 வது இடத்திலும் பிலிப்பைன்ஸ் 90 வது
இடத்திலும், தைவான் 79 வது இடத்திலும், கொரியா 99 வது இடத்திலும் சீனா 107
வது இடத்திலும் உள்ளது என தெரிவித்தார். IDACA பயிற்சி வகுப்புகளில் இளம்
பெண்களின் பங்கேற்பு பற்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *