சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூடும் சார்பில் “நோபல் உலக சாதனைக்கான” இரட்டைக் கம்புசுற்றும்சிலம்பாட்டம்

தமிழக அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பாட்ட வீரர்களும் இணைக்கப்பட்டனர் , இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் , சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூடும் சார்பில் “நோபல் உலக சாதனைக்கான” இரட்டைக் கம்பு சுற்றும் சிலம்பாட்டம் சென்னை செனாய் நகர் ஸ்கேட்டிங் பூங்காவில் நடைபெற்றது.

இரு கைகளிலும் சிலம்பு கம்புகளை பிடித்து அதை ஒரு மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து சுற்ற வேண்டும் என்பது சாதனைக்கான விதிமுறையாக வைக்கப்பட்டது. இந்த சாதனைக்காக சில மாதங்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்ட ஐந்து வயது முதல் 40 வயது வரையிலான நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை ஷெனாய் நகர் “ஸ்கேட்டிங்” பூங்காவில் இந்த சாதனையை நிகழ்த்தினார். சிலம்ப பயிற்சியாளர்கள் ருக்மாங்கதன் , ஏழுமலை ஆகிய ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை புரிந்த அனைவருக்கும் ரயில்வே டி.எஸ்.பி ரமேஷ் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்…