அதானி குடும்ப விவகாரம் தொடர்பாக ஒன்றியஅரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் எஸ்.சி துறை கண்டன ஆர்ப்பாட்டம்
அதானி குழுமத்துக்கு கடன் வழங்க பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி மற்றும் எஸ்பிஐ வங்கிகளை நிர்ப்பந்தித்ததாக ஒன்றிய அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதானி குடும்ப விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலையிலுள்ள எல்ஜசி கட்டிட வளாகம் முன் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுத்துறை சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அதோடு அதானி மோசடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாதது குறித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் குமார்,
பட்டியலினத்தவர் மற்றும் ஏழை எளிய மக்கள் எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடு செய்துள்ளனர். இந்த பணத்தை அதானி குடும்பத்திற்கு 82 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்க
ஒன்றிய அரசு நிர்பந்தித்ததாகவும்,
அதானிக்கு துணை போனதாக பிரதமர் மோடியை குற்றவாளியாக அறிவித்து விசாரணை நடத்த வேண்டுமென நாடாளுமன்றத்தில் வலியுறுத்த போவதாக கூறினார்
மோடி ஒரு திருடர் என்று ஆவேசமாக கூறிய அவர், இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால், ஒன்றிய அரசைக் கண்டித்து பாஜக தலைவர்கள் வீடு, அலுவலகங்கள் மற்றும், பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.