தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா…

0
28FD5F69-6327-4DB1-911B-5B48D6C5A5B4

தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உள்ள ராதா பார்க் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தேர்தல் அதிகாரிகளான மதிவேந்தன் மற்றும் சுப்பு ஆகியோர் முன்னிலையில் சங்கத்தின் தலைவராக பர்வீன் டிராவல்ஸ் உரிமையாளர் ஏ அப்சில், செயலாளராக பாக்கியலட்சுமி டிராவல்ஸ் மாறன்,பொருளாளராக கே ஆர் எஸ் ரமேஷ்,துணைத் தலைவராக நேஷனல் டிராவல்ஸ் முத்துக்குமார் திப்பு சுல்தான் டிராவல்ஸ் அல்லா பாஷா இணை செயலாளராக மேட்டூர் சூப்பர் டிராவல்ஸ் பாலாஜி டி ஏ டி ராவல்ஸ் விக்னேஷ் மாரிமுத்து ஆகியோர் நிர்வாகிகளாக பதிவேற்றுக்கொண்டனர்..

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை இயக்குனர் எஸ் ஆர் எம் டிராவல்ஸ் ரவி கேபிஎன் டிராவல்ஸ் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்து புதிய நிர்வாகிகள் மற்றும் புதிய செயற்குழு உறுப்பினர்களை அறிவித்தனர்

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய எஸ்.ஆர்.எம்.குழுமம் பச்சை முத்து பேசுகையில் எங்களிடம் அரசு பேருந்து நிர்வாகத்தை ஒப்படைத்தால் ஓராண்டில் லாபகரமாக நடத்திக் காட்டுகிறோம் என அவர் தெரிவித்தார்…

பேட்டி : தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அப்சல்…

தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளேன் மேலும் சங்கத்தினை வலுப்படுத்துவதற்கு அயராது உழைப்பேன்..

கொரோனா பெருந்துட்டிற்கு முன்னதாக சங்கத்தின் சார்பில் நான்காயிரம் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டது ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பாதியாக பேருந்துகள் குறைந்துள்ளது அதே வேளையில் சங்க உறுப்பினர்களும் குறைந்துள்ளனர்.

மேலும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினை வலுப்படுத்துவதற்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்

நீண்ட நாட்களாக ( 6 மாதம் ) தொழில் ஈடுபடாத உறுப்பினர்களை சங்கத்தை விட்டு நீக்குவது…,நம் சங்கத்தில் உறுப்பினராக இருந்துக்கொண்டு வேறு சங்கத்தில் தொடர்பு வைத்து நம் சங்கத்திற்கு எதிர்மயரையாக செயல்படுவது தெரிய வந்தால் அவர்களை நீக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் இன்று நடந்த ஆண்டு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது…

தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ஒரு சில ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது கூடிய விரைவில் அது கண்டறியப்பட்டு தீர்வு காணப்படும்…

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *