தேர்வு எழுதும் மாணவ – மாணவியருக்காக டாக்டர் பால்தினகரன் சிறப்பு பிராத்தனை

0
F50E0EDA-2A9E-40B6-8490-B603D8A735E9

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள தூய ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற தேர்வு எழுதும் 10 ,11 மற்றும் 12 – ஆம் வகுப்பு மாணவர்களின் வெற்றிகாகவும் , சிறப்பாக தேர்வுக்கு தயார் படுத்தவும் இயேசு அழைக்கிறார் ஊழிய ஸ்தாபகர் டாக்டர்.பால் தினகரன் தலைமையில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது . கூட்டத்தில் கலந்து கொண்டு ஆயிரகணக்கான மாணவ – மாணவியரை உற்சாகப்படுத்தும் விதத்தில் டாக்டர் பால் தினகரன் அவர்கள் பாடல்கள் பாடி , செய்தி வழங்கி பிராத்தனை செய்தார் . அவரது எழுச்சியூட்டும் செய்திகளுக்கிடையே இதற்கு முன் நடைபெற்ற தேர்வு எழுதும் மாணவ – மாணவியருக்கான பிராத்தனை கூட்டத்தில் பங்கேற்று அதிக மதிப்பெண்களும் , பரிசுகளும் பெற்ற மாணவ – மாணவியரின் சாட்சிகள் மாணவ – மாணவியரை உற்சாக படுத்துவதாக அமைந்தது . இக்கூட்டத்தில் சகோதரி இவாஞ்சலின் பால்தினகரன் சிறப்பு பிராத்தனை ஏறெடுத்தார் . சகோதர் சாமுவேல் , சகோதரி ஸ்டெல்லா ரமேலாவின் சிறப்பு பாடல்கள் மாணவ – மாணவியரை உற்சாகமூட்டியது. இந்த நிகழ்ச்சயில் பலரும் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *