அகில இந்திய மோடி மக்கள் மன்றம் முப்பெரும் விழா

0
379A57D8-37DE-42D4-8105-B5671D68B3C0

மோடி மக்கள் மன்றம்
மாநில பொறுப்பாளர் அறிமுக விழா , நிறுவனத்தலைவர் பிறந்தநாள் விழா , மற்றும் சிங்கப்பாதை புத்தக வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நிறுவனத் தலைவர் என்.வி. ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது .

இவ் விழாவில் சிறப்பு அழைப்பாளராக மோடி மக்கள் மன்ற தேசிய கௌரவத் தலைவரும் மத்திய அரசின் கல்வி ஆலோசனை குழு உறுப்பினருமான டாக்டர் – பி . ராமசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் . சந்த்மஹா சபா தமிழ்நாடு மாநில தலைவர் ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீராம்ஜி , காசி ஸ்ரீலஸ்ரீ சுவாமி முக்தானந்தா சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் கௌரவ அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மோடி மக்கள் மன்ற தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் பன்னீர்செல்வம் தமிழ்நாடு மாநில துணை தலைவர் பி. எஸ். கருணாநிதி, எம். கந்தசாமி மிலிட்டரி காமராஜ் , தமிழ்நாடு மாநில விவசாய அணி தலைவர் பி . வேடியப்பன் , தேசிய துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு எஸ்.சி எஸ் .டி பிரிவு மாநில தலைவர் டி . மதியழகன், அகில இந்திய இளைஞர் அணி தலைவர் என். வி .ஆர் .விமல் , இளைஞர் அணி தலைவர் மாரிமுத்து , தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் கோகுல் பிரசன்னா , தேசியத் துணை தலைவர் சத்யநாராயணன் மற்றும் மற்றும் தேசிய , மாநில மாவட்ட நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *