சட்டக்கல்லூரி மாணவர்கள் சங்கம் சார்பாக தமிழர்கள் உரிமை பறிக்கப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

வள்ளுவர் கோட்டத்தில் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும் இதனை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புரட்சி தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கலந்து கொண்டார். மேலும் இளம் வழக்கறிஞர் சங்கத்தின் நிறுவனர் புதிய ராஜா உள்ளிட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டு தமிழகத்தில் அதிகரித்து வரும் வட மாநிலத்தினர் ஆதிக்கத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏர்போர்ட் மூர்த்தி தமிழகத்தில் தொடர்ந்து வட மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும். தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை வழங்கக் கூடாது என்று கூறி வடமாநிலத்தவர் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த கூடிய நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்
தமிழர்களுக்கு தனியார் மற்றும் அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்க சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் எனக் கூறினார்