இந்திய இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது
சென்னை அண்ணாநகர் பகுதியில்இந்திய இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகம் முன்பு தமிழக காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சர்க்கிள் தலைவர்கள் முரளிகிருஷ்ணா ஏழுமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரஞ்சன் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் மாநிலச் செயலாளர்கள் வடசென்னை ரஞ்சித்குமார், தண்டபாணி, அப்துல் ரஹ்மான் சேக், நரசிம்மன்,எஸ் சி எஸ் டி பிரிவு மாவட்டதலைவர் ஜார்ஜ், செய்தி தொடர்பாளர் சஞ்சய், உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரஞ்சன் குமார் கூரியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து ஏழைகளுக்கும் இளைஞர்களுக்கும் துன்பத்தை ஏற்படுத்துகிறது, இளைஞர்களுக்கு எதிராக அக்கினிபத் திட்டத்தை மோடி அமல்படுத்த நினைக்கிறார். இளம் தலைவர் ராகுல் காந்தி வேளாண்மை திருத்த சட்டத்தை அமல்படுத்த கூடாது என்பதை முன்னுருத்தி போராட்டங்கள் நடத்தி அந்த சட்டத்தை திரும்ப பெற செய்தார் அது போலாவே இந்த சட்டத்திற்கும் எதிராக காங்கிரஸ் கட்சி போரட்டங்களை முன்னெடுத்து வருகிறது இந்த சட்டமும் பின் வாங்குவார்கள்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரியாமல் பேசுகிறார் 4 எம் எல் ஏ வை வைத்துள்ள கட்சி 15 எம் எல் ஏ 8 எம் பி களை வைத்துள்ளோம் எங்களை பற்றி அவர் தெரியாமல் பேசுகிறார் அவருக்கு பதில் எங்கள் தலைவர்கள் சொல்லுவார்கள்.
கூடிய விரைவில் தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சி அமையும்.