அக்னிபத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்திலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகம் முன்பு தமிழக காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதில் ஒரு பகுதியாக தென் சென்னை கிழக்கு மாவட்டம் மயிலாப்பூர் தொகுதி மந்தவெளி பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் தென் சென்னை கிழக்கு கிழக்கு மாவட்ட தலைவர் அடையார் டி.துரை தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில்
மாநில சிறுபான்மை துறை துணை தலைவர் i.ஸ்டீபன் அவர்கள் கலந்து கொண்டு
ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பினார் மயிலாப்பூர் சர்கில் தலைவர் ரகு சந்தர்
அசோக் பாபு 126 வது வட்ட தலைவர் வினோத் ராஜ் இவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மயிலை தரணி மயிலை அசோக் குமார்
உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்