மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டிஸ்” நிறுவனர் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி

0
0C344A06-0DD4-46AE-AFAF-7E9C910E5C4E

சென்னையில் “மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டிஸ்” நிறுவனரின் பிறந்தநாளை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி !!

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய நிர்வாக செயலாளர், மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், Rtn V.ஜெயச்சந்திரன் அவர்களின் 41- வது பிறந்த நாளை முன்னிட்டு 150 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா FAIRA கூட்டமைப்பின் நிறுவனர் – தேசியத்தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தலைமையில் சென்னை, வடபழனி, சிகரம் செலிப்ரேஷன் ஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்’நிகழ்ச்சியை , ஊக்க பயிற்சியாளர் மற்றும் தொகுப்பாளர் நந்தகுமார் தொகுத்து வழங்கினார். “மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம்” நிறுவனத்தின் இயக்குனர், C.V.ருநானா, திருமதி.பாலிகா ஜெயச்சந்திரன்,
J.ஜீவஸ்ருதி, J.ஜஸ்வந்தி, திருமதி.ஹேமலதா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் “மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம்” நிறுவனத்தின் ஊழியர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணையாளர் டாக்டர்.R.பிரதாப்குமார் அவர்களும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராமசுப்பிரமணியம் ADGP அவர்களும், திரைப்பட நடிகர் பிக்பாஸ் பரணி, டாக்டர் சி.எம்.கே.ரெட்டி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவியை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக FAIRA கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் S.ராஜசேகர், R.சந்திரசேகர், G.ரமேஷ், R.கார்த்திக், பாபு, B.உதயகுமார், S.V.ரவி, K.பொன்குமார், பாஸ்கர், மோகன், சக்திவேல், A.முனீஸ்வரன், சிவகுமரன் மற்றும் ரோட்டரி கிளப்பை சேர்ந்த நண்பர்கள் முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், மக்கள் நலப்பேரவையை சார்ந்த பொறுப்பாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்பித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *