டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில்மும்பை மகப்பேறியல் மருத்துவருக்கு பார்வைத்திறனை மீண்டும் வழங்கிய உலகின் முதல் வகையான நவீன கண் அறுவை சிகிச்சை
சென்னை, பிப்ரவரி 2026: இந்தியாவில் கண் மருத்துவத்தில் முதன்மை வகிக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, மும்பையைச் சேர்ந்த 44 வயதான மகப்பேறியல் பெண் மருத்துவருக்கு வெற்றிகரமாகப் பார்வையை மீட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகக் கடுமையான குளுக்கோமா மற்றும் கண் தொடர்பான சிக்கல்களால் இரண்டு கண்களிலும் படிப்படியாக பார்வைத்திறன் குறைந்து, முற்றிலுமாக பார்வையை இழந்திருந்தார். இதற்கு முன் பல அறுவை சிகிச்சைகள் செய்தும் பலன் கிடைக்காத நிலையில், டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனை இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இது உலகளவில் முதன் முறையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு மிகச் சிக்கலான அறுவைசிகிச்சை நிகழ்வாக இது கருதப்படுகிறது. நோயாளியின் இடது கண்ணில் ஏற்கனவே தவறாகப் பொருத்தப்பட்டிருந்த செயற்கை லென்ஸை (IOL) மருத்துவர்கள் அகற்றினர். பின்னர், ‘5F-ISHF’ எனும் நவீன உத்தியின் வழியாக, புதிய லென்ஸ் பொருத்தப்பட்டது. இதனுடன் கண்களின் முழுமையான குறைபாடுகளை சரிசெய்வதற்காக, கருவிழி மாற்று சிகிச்சை (OPK) மற்றும் கண் பாவை சீரமைப்பு ஆகியவையும் ஒரே சிகிச்சை அமர்வில் செய்யப்பட்டன.
அறுவை சிகிச்சை முடிந்த உடனேயே நோயாளிக்கு இடது கண்ணில் கணிசமான அளவு (6/24) பார்வைத்திறன் மீண்டும் கிடைத்திருக்கிறது. வாழ்க்கையையே மாற்றி அமைத்திருக்கும் இந்த பார்வைத்திறன் மீட்சியானது, அவர் தனது மருத்துவப் பணிக்கு மீண்டும் திரும்புவதற்கு வழிவகுத்திருக்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண் மேலும் குணமடைவதால், அவரது பார்வையில் இன்னும் அதிக முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் டாக்டர். அகர்வால்ஸ் ரெஃப்ராக்டிவ் மற்றும் கார்னியா பவுண்டேஷனின் இயக்குனர் & தலைவராகவும் மற்றும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் கண்புரை மற்றும் கண் அழுத்தச் சேவைகளின் மூத்த ஆலோசகருமான டாக்டர். சூசன் ஜேக்கப், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவச் சேவைகள் மண்டலத் தலைவர் டாக்டர் சௌந்தரி எஸ். மற்றும் விட்ரியோ ரெடினா துறையின் கிளினிக்கல் லீட் மற்றும் தலைவருமான டாக்டர் மனோஜ் காத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அகர்வால்ஸ் குழுமத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி மற்றும் முதுநிலை கண்
சிகிச்சை நிபுணர் டாக்டர் அஸ்வின் அகர்வால் கூறுகையில், “பல ஆண்டுகள் பார்வைத் திறனின்றி அவதிப்பட்ட இந்த இளம் மருத்துவ நிபுணர் மீண்டும் அவரது பணிக்குத் திரும்புவதைப் பார்ப்பது உண்மையிலேயே எங்களுக்கு மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது. விதிவிலக்கான, அதிக சிக்கலான ஒரு பாதிப்பு நேர்வுக்கான பல அறுவைசிகிச்சை அணுகுமுறைகள் இதற்கு தேவைப்பட்டன. கண்ணின் சிதைந்த அமைப்பைச் சீரமைத்தல், புதிய லென்ஸைப் பாதுகாப்பாகப் பொருத்துதல் எனப் பல சிகிச்சைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டியிருந்தது. எங்கள் மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த நிபுணத்துவமும், சிறப்பான கட்டமைப்பு வசதிகளும் இதை சாத்தியமாக்கியது.” என்றார்.
சாதனை முயற்சியான இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்ட DARCF-ன் இயக்குனர் டாக்டர் சூசன் ஜேக்கப் கூறுகையில், “நோயாளிக்கு 2010-லிருந்தே குளுக்கோமா பிரச்சனை இருந்தது. கண் புரைக்கான அறுவைசிகிச்சை மற்றும் தாங்குதிசு நீக்கல் சிகிச்சை போன்றவற்றை பிற மருத்துவமனைகளில் செய்து கொண்ட போதிலும், அவரது பார்வைத்திறன் குறைந்து கொண்டே போனது. ஏறக்குறைய பார்வைத்திறனை முழுமையாக இழந்த நிலையில் அவர் எங்களிடம் சிகிச்சைக்கு வந்தார். அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த பழைய லென்ஸ் நகர்ந்து, கண்ணின் மற்ற பகுதிகளை அழுத்தியதே இதற்கு முக்கிய காரணம். நாங்கள் அந்த லென்ஸை அகற்றி, ‘5F-ISHF’ முறையில் புதிய லென்ஸைப் பாதுகாப்பாகப் பொருத்திப் பார்வையை மீட்டோம்,” என்றார்.
‘5F-ISHF’ என்பது டாக்டர் சூசன் ஜேக்கப் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நவீன தொழில்நுட்பமாகும். இதில் தையல் இல்லாமலும், பெரிய கீறல்கள் இல்லாமலும் மிகத் துல்லியமாகப் புதிய லென்ஸ் பொருத்தப்படும். கண்ணின் கட்டமைப்பிற்கு உட்புறத்தில் சரியாக இந்த லென்ஸ் பொருந்துவதால், நோயாளிக்குப் பாதுகாப்பான, நிலையானத் தீர்வு கிடைக்கிறது.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குறித்து
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, அதன் பரந்துபட்ட கிளைகளைத் தாண்டி, கண் மருத்துவத் துறையில் பல புரட்சிகரமான புதுமைகளைப் புகுத்தியதற்காக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, முதன்முறையாகச் செயல்படுத்தப்பட்ட பல முக்கிய அறுவை சிகிச்சை முறைகள், இன்று உலகெங்கிலும் உள்ள கண் மருத்துவர்களால் பின்பற்றப்படுகின்றன.
Glued IOL: கண்ணில் இயற்கையான லென்ஸ் தாங்கி இல்லாதபோது அல்லது சேதமடைந்திருக்கும்போது, தையல் எதுவும் இல்லாமல் லென்ஸைப் பொருத்தும் ஒரு நவீன முறையாகும். PDEK: இது தையல் இல்லாத கருவிழி மாற்று சிகிச்சையில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகும். SFT பியூப்பிலோபிளாஸ்டி: இது விரிவடைந்த அல்லது சேதமடைந்த கண் பாவைகளை, முடிச்சுகள் இல்லாமல் பாதுகாப்பாகச் சீரமைக்கும் ஒரு முறையாகும். பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி (PPP): மிகவும் சீரற்ற கருவிழி அமைப்பு கொண்ட நோயாளிகளின் பார்வைத்திறனை மேம்படுத்துவதற்கான சிகிச்சையாகும். CAIRS: ‘கெரட்டோகோனஸ்’ எனப்படும் கூம்பு வடிவ கருவிழி நோய் மற்றும் கருவிழி மெலிதல் போன்ற பிரச்சனைகளுக்கு அளிக்கப்படும் சிறப்புச் சிகிச்சை முறையாகும்.
