அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு

0
IMG-20210802-WA0010

அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை ஆழ்வார் திருநகரில் தனியார் திருமண மண்டபத்தில் சங்கத்தில் நடந்த பண மோசடி தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது அப்போது பேசியஅனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்கத்தின் கௌரவ ஆலோசகர் ராஜா , எங்கள் சங்கத்தின் பைலா படி செயற்குழு பொதுக்குழு கூடி சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட சங்கத்தின் முன்னாள் பொருளாளர் சுரேஷ்பாவும் , சங்கத்தின் முன்னாள் செயலாளர் மணிமாறன் ஆகியோர் சங்கத்தின் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்து வருகிறார்கள் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் மேலும் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்கம் சார்பில் ஒரு நல வாரியம் அமைத்து தர வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது அதுபோன்று கார்ப்பரேட் நிறுவனங்கள் பெயின்டிங் துறையிலும் தலைவிரித்து ஆடி வருவதாகவும் மிகப்பெரிய பெயிண்டிங் முதலாளிகள் பெயிண்டிங் மூலம் இந்தியாவில் நுழைந்து வருவதால் பெயின்டிங் தொழில் செய்துவரும் சிறு தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதனால் பொது மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார் இது ஒரு முதலாளித்துவம் நிறைந்த சங்கம் இல்லை என்றும் இது தொழிலாளர் நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுகின்ற ஒரு தொழிலாளர் சங்கம் என்றும் தெரிவித்தார் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநில தலைவர் அடைக்கலம் , மாநில அமைப்பு செயலாளர் செளந்திரபாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்ராஜ், மாநில துணைச்செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட அனைத்து பெயின்டர்கள் மற்றும் ஓவியர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *