ஹுமாயூன்மருத்துவமனையில்வயிற் றில்கீறலோசெயற்கைஆசனவாய்உருவாக்கமோவெற்றிகரமாக நடைபெற்ற நவீன மலக்குடல் அறுவைசிகிச்சை

IMG-20260929-WA0374

சென்னை, செப்டம்பர் 28, 2026: சென்னை மாநகரில் பிரபலமான டாக்டர் ஹுமாயூன் சிறப்பு மருத்துவமனையில், ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 77 வயது முதியவருக்கு, வயிற்றில் கீறலிடப்படும் அறுவைசிகிச்சை மற்றும் செயற்கை ஆசனவாய் (ஸ்டோமா) தேவைப்படாதவாறு, மிகச்சிறிய அளவிலான துளை மூலம் பெரிய மலக்குடல் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.ஆசனவாய் வழியாகச் செய்யப்படும் குறைந்தபட்ச ஊடுருவல் அறுவைசிகிச்சை (TAMIS) எனப்படும் அதிநவீன மருத்துவத் தொழில்நுட்ப உத்தியின் மூலம், இயற்கையான ஆசனவாய் வழியாகவே இந்த 5 செ.மீ அளவிலான கட்டி மலக்குடலிலிருந்து அகற்றப்பட்டது. இதனால் இந்த முதிய நோயாளிக்கு வயிற்றில் கீறலிட்டு செய்யப்பட வேண்டிய பெரிய அறுவைசிகிச்சை தவிர்க்கப்பட்டது. ஒரு மணி நேரம் நடந்த சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி ஆறு மணி நேரத்திலேயே வழக்கம்போல உணவருந்த தொடங்கினார்; அன்றே அறைக்குள் நடமாடவும் முடிந்தது. மறுநாள் காலையிலேயே மருத்துவமனையில் இருந்து தனது வீட்டிற்கு முதியவர் நலமுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

தாஸ்குப்தா தலைமையில் இந்த வெற்றிகர அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. TAMIS முறையைப் பயன்படுத்தி, இயற்கையான ஆசனவாய்திறப்பு வழியாக நுழைந்து இந்த பெரிய மலக்குடல் கட்டியை மருத்துவக் குழுவினர் முழுமையாக அகற்றினர்.

இந்த முதியவருக்கான சிகிச்சை குறித்துப் பேசிய டாக்டர் பினாக் தாஸ்குப்தா, “ஒரு முதியவருக்கு வயிற்றில் பெரிய அறுவைசிகிச்சையைத் தவிர்ப்பது, அவர்கள் விரைவாகக் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதில் பெரிய அளவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படும் இதுபோன்ற நோயாளிகளுக்கான சிகிச்சை அணுகுமுறையில், வயிற்றில் வெட்டுக்காயத்துடன் செய்யப்படும் அறுவைசிகிச்சை இன்றியே மலக்குடல் கட்டிகளை அகற்ற TAMIS பெரிதும் ஏதுவாக்குகிறது. நோயாளிக்கு மிக குறைவான உடல் சிரமமே ஏற்படும் விதத்தில், விரைவில் குணமடையச் செய்யும் சரியான சிகிச்சை அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக செயல்படுத்துவதே எமது நோக்கமாகும்” என்றார்.

இந்த நவீன மருத்துவ செயல்முறை பொருளாதார ரீதியாகவும் நோயாளிகளுக்குப் பெரும் நன்மையை அளிக்கிறது. பொதுவாக பெரிய அறுவைசிகிச்சைக்கு ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான செலவிலேயே இந்த நவீன சிகிச்சை சாத்தியமாவதால், நோயாளிகளுக்கு ஏற்படும் நிதிச் சுமையும் பெருமளவு குறைகிறது.

மருத்துவமனையின் நிறுவனரும் இயக்குநருமான டாக்டர் அஸ்மா ஹுமாயூன் கூறுகையில், “அதிநவீன மருத்துவ சிகிச்சைகள் நோயாளிகளுக்கு எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கச் செய்வதே எங்களது முதன்மை நோக்கமாகும். நோயாளிகளின் பாதுகாப்பு, வசதி மற்றும் விரைவாகக் குணமடைதல் ஆகிய குறிக்கோள்களை கருத்தில் கொண்டு, புதிய சிகிச்சை முறைகளையும் சிறப்பு நிபுணத்துவத்தின் பலன்களையும் வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்பை, இந்த சிகிச்சை பிரதிபலிக்கிறது” என்றார்.

TAMIS என்பது, வயிற்றில் கீறலிட்டு அறுவைசிகிச்சை செய்வதைத் தவிர்த்து, இயற்கையான ஆசனவாய் வழியாகவே கட்டிகளை அகற்றும் ஒரு அதிநவீன தொழில்நுட்ப உத்தியாகும். நோயாளியின் ஒட்டுமொத்த உடல்நலம், கட்டியின் அளவு, அமைவிடம் மற்றும் தன்மை உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்தே இந்த சிகிச்சை உத்தியைப் பயன்படுத்துவது குறித்த முடிவு எடுக்கப்படுகிறது. என்றார்

About Author