வெங்கடேஸ்வரா மருத்துவமனை நிர்வாகம் இந்தியாவின் முதல் உயர் ரத்த அழுத்ததிற்க்கான சென்டர் தொடக்கம்

0

சென்னை நந்தனத்தில்
வெங்கடேஸ்வரா மருத்துவமனை நிர்வாகம் இந்தியாவின் முதல் உயர் ரத்த அழுத்ததிற்க்கான
சென்டர் ஃபார் எக்ஸ்சலன்ஸ் ஃபார் ஹைபர்டென்ஷன் என்ற சிறப்பு மருத்துவமனையை தொடங்கி உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை நாடலுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தா வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர். மேலும் வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் தில்லை வள்ளல் மற்றும் மருத்துவர், ஊழியர்கள் உடனிருந்தார்..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் :-

சக்கரை நோயை கவனம் எடுத்து கவனித்து கொள்வது போல மக்கள் உயர் ரத்த அழுத்தத்தையும் கவனித்து கொள்ள வேண்டும் என்றார்.

இலங்கை மீனவர்களால் ஒவ்வொரு முறை தாக்கப்படும் போது மட்டும் இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்களாக மாறி விடுகிறார்கள் எனவும் மீனவர்கள் பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். உடனடியாக பிரதமர் இந்த விவரகரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

மேலும் திமுக சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும் என்றும்
திமுக தான் மிக வலுவான ஜனநாயகக் குரலாக நாடாளுமன்றத்தில் இருக்கிறது என தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *