வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் குடியிருப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு

c1e45768-013b-46fc-9a2d-124beee4f7d2

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி சென்னை, தேனாம்பேட்டை, நந்தனம் லோட்டஸ் காலனியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டாறிந்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்துசாமி :-

லோட்டஸ் காலனி அருள் சக்தி விநாயகர் கோயில் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலம் வீட்டு வசதி வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது தற்போது சாலை விரிவாக்கதுக்காக கோயில் மாற்று இடத்தில் அமைக்க திட்டமிடபட்டுள்ளது.
இந்த 30 அடி சாலையை 60 அடி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது
வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடம் உள்ள பகுதியில் வணிக வளாகம் கட்ட திட்டமிட பட்டுள்ளது
இங்கே 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மிக மோசமாக உள்ளது.
உரிய சட்ட திருத்தம் மூலமும் தேவை என்றாலும் அவற்றை செய்து மாற்று குடியிருப்பை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
30 அடி அகலப்படுத்துவதால் கூடுதல் இடம் கிடைக்கும் இதன் கூடுதல் குடியிருப்புகளை கட்ட முடியும் என்றார்.

அதேபோல் புதிதாக கட்ட உள்ள கட்டுமான நிறுவனத்தையும் இங்கே உள்ள குடியிருப்பு வாசிகள் தேர்வு செய்ய உள்ளனர், இங்கே இருந்த கோயிலுக்கு மாற்று இடம் அளிக்கவும் திட்டமிட்டு உள்ளோம்
கட்டிடம் கட்டிதர உள்ள நிறுவனம் 100 ஆண்டுகான கட்டிடத்தை உறுதி செய்ய வேண்டும், மேலும் ஒட்டுமொத்தமாக 3500 குடியிருப்புகள் விற்பனையாகாமல் உள்ளன. 6 மாத காலத்திற்குள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
வீட்டு வசதி வாரிய குடியுருப்பு என்றால் குறைந்த மதிப்பு மக்கள் மத்தியில் உள்ளது விற்பனை குறைந்ததற்க்கு இதுவும் ஒரு காரணம் என்றார்.

About Author