மதராஸ்ஸ் டெர்லிங் லேடிஸ் ரவுண்டு சர்கல் 63 & 123 சாரிட்டியின் சார்பில் ரூபாய் 25.000 கான காசோலைசெல்வி கோபிகாவுக்கு வழங்கப்பட்டது
சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்ற தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள பத்தாவது சர்வதேச அளவிலான ஸ்ட்ரென்த் லிப்டிங் அண்ட் ஐ பி பி 2023 போட்டியில் கலந்து கொள்ள தமிழ்நாடு ஸ்டேட் லிப்டிங் அசோசியேசன் சார்பாக திரு.ஜெயராமன் மற்றும் திரு.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் 13 வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியில் செல்வி கோபிகா சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் கேட்டகிரியில் கலந்து கொள்ள உள்ளார். போட்டியில் கலந்து கொள்வதற்கான நுழைவுக் கட்டணம் மற்றும் இதர செலவுகள் சேர்த்து 75 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.செல்வி கோபிகாவின் ஸ்கேட்டிங்கிருக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு திரு பிரகாஷ் கலையடா அவர்களின் உதவியுடன் மதராஸ்ஸ் டெர்லிங் லேடிஸ் ரவுண்டு சர்கல் 63 & 123 சாரிட்டியின் சார்பில் ரூபாய் 25000 கான காசோலை வழங்கப்பட்டது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதராஸ்ஸ் டெர்லிங் லேடிஸ் ரவுண்டு சர்கல் 63 தலைவர் பனிஷா ஷா, மதராஸ்ஸ் டெர்லிங் லேடிஸ் ரவுண்டு சர்கல் 63 செயலாளர் பிரியங்கா ஜெயின், மதராஸ்ஸ் டெர்லிங் லேடிஸ் ரவுண்டு சர்கல் 63 தலைமை விருந்தினர் அஜிதா நாக்பால் ஆகியோர் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். விளையாட்டு மற்றும் பல்வேறு வகையான சமூக சேவைகளை எங்கள் நிறுவனம் செய்து வருகிறது என்றும் அதில் அதிகமாக விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அந்த வகையில் செல்வி கோபிகாவிற்கு 25000 கொடுத்து உதவியதாகவும் இதன் மூலம் தான் அதிக மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார். பின்பு செல்வி கோபிகா பேசுகையில் தனக்கு நன்கொடை அளித்தற்கு தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.மேலும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு உதவ வேண்டும் என்றும் இதனால் நாங்கள் அனைவரும் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல முடியும் என்று அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர்.