பெட்ரோலில் இயங்கும் 2 புதிய மாடல் வால்வோ கார்கள் அறிமுகம்!
S90 மற்றும் XC60 என, இரு கவர்ச்சிகரமான வால்வோ கார்களை, புதிய சேவைத் திட்டங்களுடன் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது, வால்வோ கார் இந்தியா!
கூகுள் சேவைகள், அதிநவீன காற்று சுத்திகரிப்பு வசதி மற்றும் வால்வோ கார் மொபைல் அப்ளிகேஷன் போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன!
விரைவில் மற்றொரு பெட்ரோல் மாடல் காரான XC90 அறிமுகம்!
சென்னை, அக்டோபர் 22, 2021
நான்கு சக்கர வாகனப் பயணத்தில் இன்றுள்ள அதிநவீன சொகுசு வசதிகளை அனுபவிக்க விரும்பும் தமிழக வாடிக்கையாளர்களுக்காக, வால்வோ கார் இந்தியா (Volvo Car India), 2 புதிய பெட்ரோல் வாகனங்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. சொகுசு செடான் எஸ்90 (Luxury Sedan S90) மற்றும் நடுத்தர அளவுள்ள சொகுசு எஸ்.யூ.வி. எக்ஸ்.சி.60 (Mid-size Luxury SUV XC60) என்ற பிராண்ட் பெயர்களில், இந்த இரு கார்களின் அறிமுகம் இன்று (அக்டோபர் 22, 2021) சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் உள்ள வால்வோ ஷோரூமில் நடைபெற்றது. “இந்த 2021-ஆம் ஆண்டு இறுதிக்குள், தனது பெட்ரோல் வாகன வரிசையை நிறைவு செய்ய வேண்டும்” என்ற இந்நிறுவன இலக்கின் ஒரு பகுதியாக இவ்விரு வாகனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய வாகனங்களான S90 மற்றும் XC60 இரண்டும், தலா 61 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் (Ex-Showroom) விலையாகும்.
இந்த வாகனங்களில் கூகுள் உள்ளிட்ட பிற நவீன அப்ளிகேஷன்களை… மென்பொருள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எளிதாக வாகனத்தை இயக்கிச் செல்லும் வசதிகள் உள்ளன. அதனால், கூகுள் அசிஸ்டெண்ட் உதவியை குரல் வடிவில் பெற முடிவதோடு, கூகுள் மேப்ஸின் வழிகாட்டுதலும் உங்களுக்கு கிடைக்கும்.