பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 50 வது ஆண்டு திருவிழா

3929d86d-5161-45ee-9ccb-290725111cd6

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 50 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறும் என்று பங்குத்தந்தை வின்சென்ட் சின்னதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பங்குத்தந்தை வின்சென்ட் சின்னதுரை இதனை தெரிவித்தார்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி பெசன்ட் நகர் திருத்தலத்தில் மாலை 5.45 மணிக்கு சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றி 11 நாள் திருவிழாவை தொடங்கி வைப்பார். பொன்விழா ஆண்டை முன்னிட்டு இந்த ஆண்டு அன்னை மரியா நம் பயணத்தின் வழி துணை என்ற மையக்கருத்தில் இந்த ஆண்டு திருவிழா கொண்டாடப்பட உள்ளதாகவும் கூறினார். மேலும் செப்டம்பர் 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு தேர் பவனி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.செப்டம்பர் 8 இரவு கொடி இறக்கம் நடைபெறும் என்றும் வின்சென்ட் சின்னதுரை தெரிவித்தார். இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.அதிக அளவில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர்.குடிநீர் மற்றும் கழிவறை என்று அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவில் பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

About Author