புராணக் கதையான வள்ளி திருமணம், புதிய புனைவுநெடுந்தொடராக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்
சென்னை, 30 டிசம்பர் 2021: முருகப் பெருமான் மற்றும் வள்ளியின் காதல் கதை தமிழ் இலக்கியத்தில் மிகப்பிரபலமானவற்றுள் ஒன்றாகும். கலர்ஸ் தமிழின் மிகப் புதிய நெடுந்தொடராக அறிமுகமாகும் வள்ளி திருமணம், இந்த அற்புதமான கதையை தற்காலத்திற்கேற்ற நவீனத்துவத்துடன் மறுஉருவாக்கம் செய்கிறது. 2022 ஜனவரி 3ம் தேதியன்று இரவு 8:00 மணிக்கு இந்நிகழ்ச்சி முதன்முறையாக ஒளிபரப்பாகிறது. வழக்கமான கிராமத்து பெண் போல அல்லாமல் மாறுபட்ட இளம் பெண்ணான வள்ளி (நடிகை நட்சத்திரா நடிப்பில்), அவளது காதலனுக்காக எதையும் செய்யக்கூடிய தைரியமான பெண்ணாக சித்தரிக்கப்படுகிறார். முதன்மை கதாப்பாத்திரமாக வள்ளியை மையமாகக் கொண்டிருக்கும் இக்கதை விறுவிறுப்பான திருப்பங்களைக் கொண்டிருக்கிறது. இளம் பெண்ணான வள்ளி காதலில் விழுந்து தனது காதலன் கார்த்திக்-ஐ (நடிகர் ஷியாமின் நடிப்பில்) தன்வசப்படுத்தும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை கண்டு ரசிக்க 2022 ஜனவரி 3ம் தேதி இரவு 8:00 மணிக்கு தனது ஒளிபரப்பை தொடங்கவிருக்கும் இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை இரவு 8:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தவறாமல் கண்டு மகிழுங்கள்.
கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. S. ராஜாராமன் இந்த நெடுந்தொடர் நிகழ்ச்சி தொடங்கப்படுவது குறித்து கூறியதாவது: “கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, வள்ளி திருமணம் என்ற இந்த புனைவு நெடுந்தொடரை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறது. தனித்துவமான கதை அமைப்பு மற்றும் சமூக தாக்கத்தை உருவாக்கக்கூடிய உத்வேகமளிக்கும் நிகழ்வுகள் மற்றும் கதாபாத்திரங்களை உள்ளடக்கியதாக நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்ற எமது கோட்பாட்டையொட்டியதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. தைரியமும், திறனும் கொண்ட ஒரு வலுவான பெண்மணி குறித்து கதை இது. தற்போதைய நவீன யுகத்தில் சுதந்திரமாக செயல்படுகிற, சிந்திக்கிற மற்றும் சொந்த விருப்ப முடிவின் படி செயல்படுகிற புதுமைப்பெண்ணின் பிரதிபலிப்பாக வள்ளியின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் வீட்டில் முடிவுகளை மேற்கொள்ளும் திறனுள்ள நபராக ஒரு பெண் இருப்பதை இது சித்தரிப்பதோடு சுய கவுரவமும், சுய மதிப்பும் கொண்ட பெண்ணின் உணர்வை இதன் மூலம் ஊக்குவிக்க இயலும் என்றும் நாங்கள் நம்புகிறோம். வள்ளி திருமணம் என்ற இந்த நெடுந்தொடர், இரு ஆண், பெண் என வேறுபாடு இன்றி அனைத்து வயது பிரிவினரையும் ஈர்க்கும் என்று கலர்ஸ் தமிழ் உறுதியாக நம்புகிறது.”
இயற்கை எழில் கொஞ்சும் தேனி நகரை பின்புலமாகக் கொண்டிருக்கும் வள்ளி திருமணம், ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகில், தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிற, கனிவான இதயம் கொண்டு வட்டிவிகிதத்துக்கு கடன் கொடுத்து வாங்கும் தொழில் செய்யும் ஒரு பெண்ணாக வலம் வரும் வள்ளியைச் சுற்றி நகர்கிறது. அவளை ஏமாற்றவும், சதியின் மூலம் காட்டிக்கொடுக்கவும் முயற்சிக்கிற நபர்கள் அவளைச் சுற்றிய இயங்க, பிறருக்கு உதவுகிற கனிவான பண்பு வெளியில் தெரியாமல் உள்ளுக்குள் மறைந்திருக்கிற போதிலும் எதைப்பற்றியும் கவலைப்படாத மனப்பான்மை மற்றும் தைரியத்தின் உருவகமாக ஒரு தனித்துவமான ஆளுமைப் பண்புடன் வள்ளியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கதாபாத்திரத்திற்கு நேர்மாறாக மென்மையாகப் பேசுகிற மரியாதையாக நடந்துகொள்பவராக கார்த்திக் தோன்றுகிறார். தன்னைப்போலவே அதே அன்பான, மென்மையான பண்பியல்புகளை தான் நேசிக்கும் பெண்ணும் கொண்டிருக்க வேண்டுமென விரும்புகிறார். இந்த இரு எதிர்மறையான வேறுபட்ட கதாபாத்திரங்கள் எப்படி ஒன்று சேருகிறார்கள் மற்றும் எப்படி ஒரு தனித்துவமான உறவை உருவாக்குகிறார்கள் என்பதை கதை மிக நேர்த்தியாகச் சொல்கிறது.
இந்த நெடுந்தொடரில் பிரபல சின்னத்திரை நட்சத்திரங்களான நடிகை நட்சத்திரா (வள்ளி) மற்றும் ஷியாம் (கார்த்திக்) முதன்மை கதாபாத்திரங்களாக இடம்பெறுகின்றனர், இவர்களோடு நடிகை நளினி (வடிவு), நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் (குண்டுராசு) மற்றும் காயத்ரி ஜெயராம் (வசுந்தரா) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நெடுந்தொடரின் இயக்குநர் திரு. R. தேவேந்திரன், இது பற்றி பேசுகையில், “ஒரு பெண்ணின் சக்திவாய்ந்த தைரியமான முகத்தை வலுவாக நிலைநாட்டுவதாக இந்நிகழ்ச்சி இருப்பதால் வள்ளி திருமணம் நெடுந்தொடரை இயக்குவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. முதன்மை கதாபாத்திரமான வள்ளி, ஒரு தைரியமான பெண்; அவளது எண்ணங்களையும், கருத்துகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற வருகிறபோது எதையும் அவள் மறைப்பதோ, மழுப்பி கூறுவதோ இல்லை. இதில் நடிக்கிற திறமைமிக்க பல நடிகர்களை இயக்குவது எனக்கு கிடைத்த கவுரவம். இயற்கை அழகு மிளிரும் அமைவிடங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு கூடுதல் பேனஸ் என்றே நான் கருதுகிறேன். இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இடம்பெற எனக்கு வாய்ப்பளித்ததற்காக கலர்ஸ் தமிழுக்கு எனது மனமார்ந்த நன்றி,” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சி பற்றி கருத்து தெரிவித்த நடிகை நட்சத்திரா, “கலர்ஸ் தமிழின் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெருமைப்படுகிறேன். சின்னத்திரையில் வலுவான பெண் கதாப்பாத்திரங்களை உருவாக்குவதன் மூலம் இதற்கு முன்பு இருந்த பழமையான கருத்துகளை உடைத்து நொறுக்கி நேர்மறையான, நம்பிக்கை தரும் நிகழ்ச்சிகளை இந்த சேனல் வழங்கி வருகிறது. தனக்காக தைரியமாக உரத்து பேசும் துணிவுகொண்ட ஒரு வலுவான, சுதந்திரமான பெண்ணாக இக்கதாபாத்திரத்தில் நடிப்பது இன்னும் அதிக உற்சாகத்தை எனக்கு தந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எனது இக்கதாபாத்திரம், எண்ணற்ற பெண்கள் அவர்களது கவலைகளை புறம் தள்ளி தைரியமாக தங்களது கருத்துகளை பொது வெளியில் எடுத்து வைக்க உத்வேகமளிக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.
நடிகர் R ஷியாம் இது குறித்து கூறியதாவது: “இந்த நெடுந்தொடரின் கதையமைப்பு வித்தியாசமானது. தனித்துவமான பண்பியல்புகளைக் கொண்ட கதாபாத்திரங்களை சிறப்பாக சித்தரிக்கும் வள்ளி திருமணம் நெடுந்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இக்கதையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானது. குடும்பத்திலுள்ள அனைத்து நபர்களையும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட ஒருங்கிணைப்பதில் இந்நிகழ்ச்சி நிச்சயம் வெற்றிகாணும்.”
சின்னத்திரையில் விரைவில் தன் முதல் ஒளிபரப்பை தொடங்கவிருக்கும் வள்ளி திருமணம் நெடுந்தொடர், “காதல் பொம்மலாட்டம் ஆரம்பம் – அடக்கமான ராஜா, அலப்பறை ராணி” என்ற வரிகளோடு ஒரு புதுமையான வெளிப்புற சந்தையாக்கல் பரப்புரை திட்டத்தையும் தொடங்கியிருக்கிறது.
சென்னையின் பல்வேறு அமைவிடங்களில் வள்ளியின் கைகளில் உள்ள கயிறுகளில் ஒரு பொம்மலாட்ட பொம்மையாக கார்த்திக்-ஐ சித்தரிக்கும் செயலியக்க நகர்வுகளை உருவாக்கியிருப்பதன் வழியாக OOH என்ற புதுமையான வழிமுறையை இந்த சேனல் பயன்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டத்தில், மிகப்பெரிய அளவிலான கட் அவுட்களும் மற்றும் ஆடியோ அடிப்படையிலான புதுமையான செயல்பாடுகளும் இந்நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. OOH புத்தாக்க முயற்சிகளுக்கும் கூடுதலாக பெல்லி பேண்ட் புத்தாக்கங்களின் வழியாக ஒரு கதை சொல்லும் ஊடகமாக ஒரு பிரபல அச்சு இதழும் திறம்பட பயன்படுத்தப்படுகிறது. பார்வையாளர்களின் ஆர்வத்தை இவைகள் நிச்சயமாக ஈர்க்கும் என்பது உறுதி. அதே நேரத்தில் இந்த நெடுந்தொடர் நிகழ்ச்சியின் ரொமான்ஸும், கதை கருத்தாக்கங்களும் மக்களின் ஆர்வத்தை தன்வசப்படுத்தும் என்பதும் நிச்சயம். #ValliThirumanam #ValliVeraMaari #AlapparaRani #AdakkamanaRaja என்ற ஹேஷ்டேக்-கள், இச்சேனலின் சமூக ஊடகக் கணக்குகளில் இதை முன்னிலைப்படுத்த பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
வள்ளி மற்றும் கார்த்திக்-ன் வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதையை கண்டு ரசிக்க வரும் திங்கள்கிழமை 2022 ஜனவரி 3ம் தேதி இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். பார்வையாளர்கள் அவர்களது வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் இந்நிகழ்ச்சியை காண VOOT-ஐ டியூன் செய்யலாம்.