பாரதிய மின் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில்
அரசுக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்ட ஊதிய உயர்வை மீண்டும் வழங்க ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தாமதப்படுத்திய காலங்களுக்கு நிலுவைத் தொகையை மீண்டும் வழங்க அகவிலைப்படி எஸ்.எல்.எஸ் கடன் வசதி பாதி அளவு போனஸை மீண்டும் வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாரதிய மின் தொழிலாளர்கள்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பாக சம்மேளனம் சார்பில் 500க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம்
பேசிய மாநில அமைப்பு செயலாளரும் வழக்கறிஞருமான ரா.முரளி கிருஷ்ணன் கூறியதாவது
19.10.2010 நாளிட்ட அரசாணை எண் 100ன் அடிப்படையில் மின்சார வாரிய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்து உடனே முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் மின்சார வாரிய பணியாளர்கள் மற்றும் ஓய்வு தருவதற்கு மின்வாரியத்தை கம்பெனிகளாக பிரிப்பதற்கு முன்னர் எந்தெந்த சலுகைகள் மற்றும் உரிமைகள் வழங்கப்பட்டு வந்தனவோ அவற்றுக்கு சற்றும் குந்தகம் ஏற்படாமல் பிரிக்கப்பட்ட நிறுவனங்களிலும் தொடர்ந்திட ஓர் முத்தரப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென மேற்கண்ட அரசாணையில் வரையறுக்கப்பட்டுள்ளது ஆயினும் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக அரசின் உத்திரவாதத்துடன் கூடிய உத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாமல் நிலுவையிலேயே உள்ளது 2010 நாளிட்ட அரசாண எண் 100 பிரிவு 6 வரையறுக்கப்பட்டுள்ள படி தமிழ்நாடு மின்சார வாரியம் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனமாக இருந்தபோது மின்வாரிய தொழிலாளர்கள் பொறியாளர்கள் அலுவலர்கள் மற்றும் ஓய்வுதாரர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு நிகராக வழங்கப்பட்ட சலுகைகள் யாவும் மின்வாரியம் கம்பெனி சட்டத்தின்படி மூன்று நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட பின்னரும் தொடரும் என்கிற அரசின் உத்திரவாதத்துடன் ஒப்பந்தத்தை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது என்று கூறினார்.