பகுதிநேர பணியாளர் வேலைவாய்ப்புகளின் சமூக தாக்கம் குறித்த ஆண்டு அறிக்கையை வெளியிட்டள்ளது

IMG_5207

சென்னை, நவம்பர் 2023: இந்திய பணியாளர் கூட்டமைப்பு வேலைவாய்ப்புகளில் பகுதிநேர பணியாளர் வேலைவாய்ப்புகளின் சமூக தாக்கம் குறித்த ஆண்டு அறிக்கையை வெளியிட்டள்ளது. இந்த அறிக்கை அத்தியாவசிய வேலைவாய்ப்பு, மக்கள்தொகை பன்முகத்தன்மை புதிய வேலைவாய்ப்பு விருப்பங்களையும் மற்றும் புதிய பணியாளர்கள், பெண்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான வாய்ப்புகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

பகுதிநேர பணியாளர் துறை ஆண்டுக்கு ஆண்டு 5 சதவிகிதமாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்து வருகிறது. 80 சதவிகிதத்துக்கும் அதிகமான பகுதிநேர தொழிலாளர்கள் தங்கள் வேலை மற்றும் பணிநேரம் திருப்தி அளிப்பதாகவும், 63 சதவிகிதம் தொழிலாளர்கள் இத்துறையில் தொடர்ந்து பணிபுரிய விரும்புவதாகவும், 19 சதவிகிதம் தொழிலாளர்கள் நிரந்தர வேலைவாய்ப்புகளுக்கான திறன்களை இத்துறையில் பெறுவதாகவும், இத்துறையில் கிடைத்த திறன்களின் அடிப்படையில் தங்களுக்குரிய வேலைவாய்ப்புகள் கிடைத்ததாக 38 சதவிகிதம் பேரும், ஒப்பந்த காலத்திற்கு பிறகும் பணி நீட்டிப்பு கிடைக்கபெறுவதாக 8 சதவிகிதம் பேரும், 17 சதவிகிதம் முதன்முறை பணியாளர்கள் வேலைவாய்ப்பு கிடைக்க பெற்றதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதிநேர பணியாளர் துறையின் தரவுகளை இந்திய பணியாளர் கூட்டமைப்பு வழங்கியுள்ளது. இது ஜூலை 2022 முதல் ஜூன் 2023 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு 12.5% சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஏப்ரல்-ஜூன் 2023 மற்றும் ஜனவரி-மார்ச் 2023 உடன் ஒப்பிடும்போது, பணியாளர் துறை 5.6 சதவிகிதம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவில் தகவல் தொழிலநுட்ப ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு -9.5 சதவிகிதமாக உள்ளதையும் இந்த அறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. பொது ஒப்பந்த பணியாளர் துறை ஏப்ரல்-ஜூன் 2023இல் 6.1 சதவிகித வளர்ச்சியுடன் புதிய வேலைவாய்ப்புகளுக்கு பங்காளித்துள்ளது.

நிகழ்வில் இந்திய பணியாளர் கூட்டமைப்பு தலைவர் லோஹித் பாட்டியா பேசுகையில், “நெகிழ்வான வேலைவாய்ப்பு மாதிரியில் வளர்ந்து வரும் நம்பிக்கையானது, சமூகப் பாதுகாப்பு, தொடர்ச்சியான வேலை வாய்ப்புகள் மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு மேம்பாடு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் இந்த வகையான வேலைவாய்ப்புடன் வரும் நேர்மறையான கருத்து மற்றும் நம்பகத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் இருவரும் நெகிழ்வான பணியாளர் தீர்வுகளை ஏற்றுக்கொள்வதும் பயன்படுத்துவதும், இன்றைய தொழிலாளர் சந்தையின் எப்போதும் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதன் செயல்திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று கூறினார்.

இந்திய பணியாளர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் பிரமோத் பச்சிசியா குறிப்பிடுகையில், “கடந்த சில ஆண்டுகளில் 25-30 வயதிற்குட்பட்ட பகுதிநேர பணியாளர்களில் குறிப்பிடத்தக்க 10% மாற்றம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் பகுதிநேர வேலைவாய்ப்பு வடிவமைப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த போக்கு மாறிவிட்டது. தனிநபர்களுக்கு அவர்களின் தொழில் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் உதவுகிறது.

இந்திய பணியாளர் சம்மேளனத்தின் நிர்வாக இயக்குனர் சுசிதா தத்தா கூறும்போது, “பெண்கள் 25 சதவிகித பங்கேற்பு தொடர்ந்து பங்களிக்கும் பகுதிநேர பணியாளர்கள் ஈர்க்கக்கூடிய பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை பாலினம் சார்ந்த தரவு காட்டுகிறது. 25-30 வயதிற்குட்பட்டவர்கள் 51 சதவிகிதம் என்ற அளவில் முன்னிலை வகிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மக்கள்தொகை அமைப்பு. பகுதிநேர வேலைவாய்ப்பின் துடிப்பான மற்றும் உள்ளடக்கிய தன்மைக்கு இது ஒரு சான்றாகும்” என்று கூறினார்.

About Author