டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனை சென்னையில் கிளாகோமா நோயாளிகளுக்கான மாநாட்டை நடத்துகிறது

சென்னை, மார்ச் 2024: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சென்னையில் 29 மார்ச் 2024 அன்று, கிளாகோமா நோயாளிகள் மாநாட்டை ஏற்பாடு செய்கிறது. இந்தியாவின் முன்னணி கண் மருத்துவர்கள் மற்றும் கிளாகோமா நிபுணர்கள் உரையாற்ற உள்ள இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்புவதற்காகவும், தொலைதூரத்தில் இருந்து நோயாளிகள் பங்கேற்பதை எளிதாக்குவதற்காகவும் இந்த மருத்துவமனை நாடு முழுவதும் உள்ள அதன் மையங்களில் வீடியோ கான்பரன்சிங் வசதிகளை நிறுவுகிறது. இதில் பங்கேற்பதற்காக பதிவு செய்ய, நோயாளிகள் https://www.dragarwal.com/glaucoma-patient-summit/ என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 95949 01868 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
கிளாகோமா என்பது கண் நோய்களின் ஒரு பிரிவு ஆகும். இது பார்வை நரம்பு எனப்படும் கண்களின் பின்புறத்தில் உள்ள நரம்பை சேதம் அடைவதன் மூலம் பார்வை இழப்பை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகள் மிகவும் மெதுவாகத் தொடங்கும், இதனால் நோயாளிகள் அவற்றைக் கவனிக்க மாட்டார்கள். ஒரு நபருக்கு கிளாகோமா இருக்கிறதா என்பதைக் கண்டறிய விரிவான கண் பரிசோதனை செய்து கொள்வது தான் ஒரே வழியாகும்.
தனிப்பட்ட முறையில் இதில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், அடிப்படையான கிளாகோமா கண் பரிசோதனை இலவசமாக நடத்தப்படும். இந்த சோதனைகளில் NCT மற்றும் ஃபண்டஸ் பிக்சர் ஸ்கிரீனிங் ஆகியவை அடங்கும். இந்த மாநாட்டில் பங்கேற்பாளர்கள் கேள்விகளைக் கேட்கவும், நிபுணர்களின் கருத்துக்களைப் பெறவும் உரையாடும் அமர்வுகளும் இடம்பெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.99 ஆகும். இதற்கான பதிவின் போது தங்கள் மருந்துச் சீட்டைப் பதிவேற்றும் பங்கேற்பாளர்கள் வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு பதிவுக் கட்டணத்தில் தள்ளுபடி பெறுவார்கள். பதிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்திற்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்படும்.