சென்னை நந்தனத்தில் உள்ள ஒய் எம் சி ஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 67வது நினைவு விளையாட்டு விழா

f1c5d2a8-3c18-4552-8753-7a4ee925ab96

ஜூலை 22 முதல் ஜூலை 26 2024 நடை பெறுகிறது*
இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய நபரான ஹாரி குரோவ் பக் இந்தியாவில் ஒலிம்பிக் இயக்கம் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். அவர் 1924 ஒலிம்பிக்கில் இந்திய அணியை நிர்வகித்தார். மேலும் 1924தொடங்கப்பட்ட
திலிருந்து 1943இல் அவர் மறையும் வரை மெட்ராஸ் ஒலிம்பிக் சங்கத்தின் முதல் செயலாளராக பணியாற்றினார்
நினைவு விளையாட்டு விழா என்பது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வாகும். இது பல்வேறு விளையாட்டுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு தளத்தைவழங்கு
கிறது. இந்த ஆண்டு பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த சுமார்5,000மாணவர்
கள் பங்கேற்பார்கள் என்று எதிர் நோக்கப்படுகிறது. இந்த விழாவின் முதன்மை நோக்கம் இளம்திறமையாளர்
களுக்கு அவர்களின் திறமைகளை மேம்படுத்தவும் விலைமதிப்பற்ற அனுபவத்தை பெறவும் வாய்ப்பு அளிப்பதாகும்
ஒய் எம் சி ஏ உடற்கல்வி இயல் கல்லூரி வளாகத்தினுள் அமைந்துள்ள பெவிலியன் மைதானத்தில் சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் சுடர்க்கொடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் சே ஜான்சன் பிரேம் குமார்,பாதர் திசை ஜெர்ரி, கல்லூரி பொருளாளர் ஜான், நிர்வாக அலுவலர் ஜான்சுதர்சன் மற்றும்அலுவலர்கள் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

About Author