சென்னை கல்யாணம்புரம் குடிசை மாற்று வாரியம் பகுதியை அமைச்சர்கள் ஆய்வு …!
சென்னை.ஜீன்.19-
சென்னை யானை கவுணியில் உள்ள கல்யாணபுரம் பகுதியில்
தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் மூலம் ரூ.54.25 கோடி செலவில், 288
வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த, குடியிருப்பு கட்டுமான பணிகளை, ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:-
தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தால் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பருவகால மாறுபாட்டினால் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து, அதே இடங்களில் மறுகட்டுமானம் செய்து, முன்னர் அந்த குடியிருப்பில் குடியிருந்தவர்களுக்கே மீண்டும் வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வழங்கப்படும் வீடுகளை, அதன் பயனாளிகள் வேறு ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்தாலோ, விற்பனை செய்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது :-
கோவில்களில் இருக்கும்
சிலைகள், நகைகள் அதன் விலையை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது.
வெளிநாட்டில் உள்ள கடத்தப்பட்ட சிலையை மீட்க
சிலை தடுப்பு துறையில் சிறப்பான அதிகாரிகள் நியமிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சிலை தடுப்பு துறையை அதிகாரிகள் கூட்டம் வருகின்ற திங்கள் கிழமை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது,
தயாநிதி மாறன் எம்.பி, மற்றும் குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.