சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் ‘மெட்ராஸ் மாப்ளை’ எனப்படும் மல்டி குசைன் ஃபைன் டைன் உணவகம் திறப்பு
சென்னை, ஜூன் 2024: சென்னையை சேர்ந்த இளமையான மற்றும் தனித்துவமான விருந்தோம்பல் பிராண்டான மெட்ராஸ் மாப்ளை, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே தனது முதல் மல்டி குசைன் ஃபைன் டைன் உணவகத்தை திறந்துள்ளது. பிரபல டிவி காமெடியனும், நடிகருமான கேபிஒய் பாலா எனப்படும் திரு.பாலன் ஆகாஷ் இந்த உணவகத்தை இன்று திறந்து வைத்தார். இதன் திறப்பு விழாவையொட்டி இந்த உணவகத்தில் உணவகம் சுமார் 50 ஆதரவற்ற குழந்தைகளை வரவேற்று அவர்களுக்கு தென்னிந்திய உணவு விருந்தான ‘மாப்ளை விருந்து’ வழங்கப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாசாலை ஜெமினி பார்சன் மேனர் பகுதியில் 4,000 சதுர அடி பரப்பளவில் இந்த உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் ஆந்திரா, செட்டிநாடு, வட இந்தியா மற்றும் சீன உணவு வகைள் என பலவகையான உணவுகள் மெனுவில் இடம்பெற்றுள்ளது. மாப்ளை விருந்து, மெட்ராஸ் மாப்ளை மட்டன் சுக்கா, மாங்கா இறால் வருவல், அர் டி ஆக்கு கோடி மற்றும் ஆந்திரா போஜனம் ஆகியவை இவர்களின் பிரத்தியேக உணவு வகைகள் ஆகும்.
இந்த உணவகம் தினமும் காலை 11:30 மணி முதல் இரவு 11:30 வரை செயல்படும். இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 150 விருந்தினர்கள் அமர்ந்து சாப்பிடலாம். மேலும் இந்த உணவகத்தில் உள்ள பார்ட்டி ஹாலில் சுமார் 50 விருந்தினர்கள் விருந்து உண்ணலாம். – மேலும் இங்குள்ள பிரைவேட் டைனிங் கேபினில் தனிப்பட்ட முறையில் 12 முதல் 15 விருந்தினர்கள் விருந்து உண்டு மகிழலாம். இங்கு சுமார் 20 கார்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இங்கு விருந்து உண்பதற்காக முன்பதிவு செய்யவும், ஹோம் டெலிவரி ஆர்டர்களுக்கும் 73050 21627 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த உணவகத்தின் திறப்பு விழாவை கொண்டாடும் வகையில், ஜூன் 10 முதல் ஜூன் 30, 2024 வரை திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகளை கவுரவிக்கும் வகையில் மெட்ராஸ் மாப்ளை உணவகம் அவர்களுக்கு இலவசமாக இரவு உணவை வழங்குகிறது. புதுமண ஜோடிகள் தங்களுடன் இரவு உணவிற்கு மேலும் 2 விருந்தினர்களை அழைத்து வரலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இதற்கு கட்டாயம் முன் பதிவு செய்ய வேண்டும். மேலும் திறப்பு விழா வாரமான ஜூன் 10 முதல் 17 வரை பில்லில் 15% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
‘சென்னை மாப்ளை’ உணவகத்தின் இயக்குநர்கள் திரு. ஜெரோம் பெனலன் மற்றும் திரு. டி.பத்ரி நாராயன் ஆகியோர் கூறுகையில், “தமிழ் சமூகத்தில் உள்ள குடும்பத்தினர் மணமகன் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு திருமணம் முடிந்த ஓரிரு நாட்களில் விருந்து பரிமாறுவதில் தனி அக்கறை கொண்டுள்ளனர். நாங்கள் அளிக்கும் ‘மாப்ளை விருந்து’ எனப்படும் இந்த விருந்துகள் மிகவும் பிரமாண்டமானவை. எங்கள் உணவகத்தில் விருந்தினர்கள் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நடத்தப்படுகிறார்கள். தமிழர்களின் விருந்தோம்பல் பாரம்பரியத்தால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டதால், எங்களது பிராண்ட் பெயரில் மாப்ளை என்பது உள்ளது. மேலும் அதன் முன்னால் உள்ள மெட்ராஸ் என்ற பெயர் எங்களின் தோற்றம் மற்றும் இருப்பைக் குறிக்கிறது. இந்த பகுதியில் மல்டி குசைன் ஃபைன் டைன் உணவகமாக செயல்படுவது நாங்கள் மட்டுமே. ஒவ்வொரு உணவு வகைகளையும் நாங்கள் முதன்மையான உணவு என்றே கருதுகிறோம். எங்கள் உணவகத்தில் உள்ள அனைத்து வகை உணவுகளும் பிரத்தியேக உணவுக்கலை நிபுணர்களால் சிறப்பாக தயாரிக்கப்பட்டு நேர்த்தியான முறையில் பரிமாறப்படுகின்றன.’’ என்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், “உணவு பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் முழுக்க முழுக்க அக்கறை கொண்டுள்ளோம். எங்கள் உணவுகளில் நாங்கள் ஒருபோதும் செயற்கை இரசாயனங்கள், வண்ணமயமான பொருட்கள்அல்லது சுவையை கூட்டும் செயற்கையான பொருட்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. இயற்கையான பொருட்கள் மூலமே சுவையான உணவு வகைகளை வழங்குகிறோம். எங்களின் அனைத்து மேற்பார்வையாளர்களும் நன்கு பயிற்சி பெற்றவர்கள் ஆவர். அவர்கள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தில் (FSSAI) உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் சான்றிதழ் (FoSTaC) பெற்றுள்ளனர்’’ என்றனர்.
கேட்டரிங் மற்றும் விருந்தோம்பல் துறையில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள இளைஞர்களை கொண்ட குழுவால் இந்த உணவகம் நடத்தப்படுகிறது. ‘மெட்ராஸ் மாப்ளை’ உணவகம் மூலம் வெளிப்புற கேட்டரிங் மற்றும் மொத்த ஆர்டர்களையும் செய்து கொடுக்கிறோம். வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு உணவை வழங்க எங்களின் பணியாளர்கள் உள்ளனர். -மேலும் எங்கள் உணவகத்தில் உள்ள உணவு வகைகள் ஸ்விகி மற்றும் சொமட்டோ போன்ற உணவு விநியோக தளங்களிலும் கிடைக்கிறது.