சிங்கார சென்னை யில் பாரத தேசத்தின் முதல் சி. எஸ்.ஆர் மாநாடு வெமா 2022
உலகத் தரம் வாய்ந்த இந்தியாவின் முதல் சி.எஸ்.ஆர் மாநாடு வெமா ஆகும். இது முக்கியமாக 12000 ஆண்டுகளுக்கு முன் லெமோரியா கண்டத்தின் பழைமை வாய்ந்த சூத்திரங்களை உள்ளடக்கிய அகத்தியர் மாமுனி வரின் அகத்தியம் என்ற நூலின் தற்சார்பு, தேனீக்கள் , மற்றும் வண்ணத்து பூச்சிகளின் பொருளாதாரத்தை கடைப் பிடித்து இயற்கையுடன் ஒத்து வாழ்தல் அத்துடன் விஞ்ஞான ரீதியான வளர்ச்சி, எந்திரமையம், நவீனமையமாக்குதல் போன்ற தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளினால் மக்கள் நலனில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமலும், இயற்கைக்கு / சுற்றுப்புற சூழல், விவசாயத்திற்கு, மக்கள் நலனிலும் ஆரோக்கியத்திற்கு எந்த கேடுகளும் வராமல் செயல் பட அருளிய சூத்திரங்களை மறு பரிசீலனை செய்து அதை நடைமுறைப்படுத்த வைக்கும் கருத்தரங்கம். இவைகளை தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் விவசாய பெருங்குடி மக்களுக்கு, பண்ணாட்டு நிறுவனங்களுக்கு, தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கு பொதுமக்களுக்கு, அரசாங்க, தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இளம் தலைமுறையினருக்கு விளக்கம் கொடுத்து அடுத்த 20 ஆண்டுகளில் பாரததேசத்தில் அனைவரும் ஒரு ங்கிணைந்து செயல் படுத்த வேண்டிய பல்வேறு வகையான திட்டங்களை நிர்ணயம் செய்யும் மாநாடு, இதன் மூலம் அடுத்த 1000 ஆண்டுகள் நம் எதிர்கால சந்ததியினர் மகிழ்வுடனும், நோய் நொடி இல்லாமலும், நஞ்சில்லா உணவு உற்பத்தியை உறுதி செய்யவும், வளம் குன்றா கிராமப்புற ஒருங்கிணைந்த விவசாய வளர்ச்சி யை மையப்படுத்தி யும், மீண்டும் பண்டமாற்று முறையின் அவசியத்தை உணர்த்தவும், தற்சார்பு சர்குலர் பொருளாதாரத்தை நிலைநிறுத்த, கிராமப்புற பகுதிகளில் மீண்டும் ஒற்றுமையை கொண்டு வர ஒரு மிகப்பெரிய சக்தியாக நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விழாவாக இந்த வெமா 2022 விழா அமையும்.