சாலையில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு தலைக்கவசம் அணிவித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

ரியல் எஸ்டேட் சங்கத்தின் தேசிய தலைவர் திரு ஹென்றி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிங் மேக்கர் நிறுவனத்தின் சார்பில் அதன் தேசிய தலைவர் ராஜசேகர் அவர்கள் ஏற்பாட்டில் 300-க்கும் மேற்பட்டோருக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கேகே நகர் உதயம் தியேட்டர் சந்திப்பில் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் காவல்துறை துணை ஆணையாளர் சக்திவேல் உதவி ஆணையாளர் ராஜா மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஷ் ஆகியோர் பொதுமக்களுக்கு போக்குவரத்து நடைமுறைகளை உறுதி மொழி ஏற்க வைத்து ஹெல்மெட் தலைக்கவசம் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் சாலை சாலையில் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்க வைத்து வழங்கப்பட்டு பின்னர் ஹெல்மெட் வழங்கப்பட்டது