குளிர் காலங்களில் இதய நோய் பாதிப்புகளை தடுக்கும் வழிமுறைகள்

0
E27338AA-5282-46DD-A387-2A0AE944F8E1

கோயம்புத்தூர், டிசம்பர் 2021: கோயம்புத்தூரில் உள்ளசிறந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை- குமரன்மருத்துவ மையம்), அவர்களின் முன்மாதிரியானமருத்துவ சேவைகள் மூலம் ஆரோக்கியமானசமுதாயத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, இருதயவியல் நிபுணர்களானடாக்டர்.ஏ.ஈஸ்வரன் எம்.டி., டி.என்.பி (இருதயவியல்) மற்றும் டாக்டர்.கே.கார்த்திக் எம்.டி., டி.என்.பி(இருதயவியல்) ஆகியோர் குளிர்காலத்தில்உண்டாகக்கூடிய இதய நோய் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து தெளிவானவிளக்கத்தையும் விழிப்புணர்வையும் வழங்குகிறார்கள். 

குளிர்காலத்தில் இதய நோய் ஆபத்து 30% அதிகமாகஇருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து குமரன் மெடிக்கல் சென்டரின் இருதய நோய்நிபுணர்கள் டாக்டர்..ஈஸ்வரன் மற்றும்டாக்டர்.கே.கார்த்திக் ஆகியோர் கூறுகையில்குளிர்காலத்தில் உடல் சூடாக இருக்க வேண்டும்என்பதால், தொடர்ந்து அதிகமான ரத்த ஓட்டம்உடலுக்கு தேவைப்படும். எனவே, இதயத்தின் வேலைகடினமானதாக மாறுகிறது. கடுமையான குளிர் இரத்தநாளங்கள் சுருங்க வழிவகுக்கிறது. எனவே, இதுஇதயத்திற்கு செல்லும் இரத்த நாளத்தையும் சுருங்கச்செய்கிறது. இந்த செயல்களால், இதயம் அதிக வேலை பளுவில் செயல்படுவதால்  குளிர்காலத்தில் இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது. குளிர்காலத்தில்வியர்வை குறைவதால், உடலில் உப்பு மற்றும் நீரின்அளவு அதிகரிக்கிறது. இது உடலில் இரத்த அழுத்தம்அதிகரிக்க வழிவகுக்கிறது. இதய நோய் ஏற்பட இதுவும்ஒரு முக்கிய காரணம். குளிர் காலத்தில், உடலில்ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இந்த ஹார்மோன்மாற்றங்களினால், இரத்த உறைவு ஏற்படுவதற்கானஆபத்து அதிகமாக வாய்ப்புள்ளது. குளிர்காலம்காரணமாக, பலர் அதிகாலையில் எழுந்திருக்கமாட்டார்கள், வழக்கமான உடற்பயிற்சிகளைத்தவிர்க்கவும் செய்கிறார்கள் அவர்களின் வழக்கமானஉடல் செயல்பாடுகளைத் தவிர்ப்பது இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. பொதுவாக, குளிர்காலம்பசியைத் தூண்டும். எனவே, பலர் அதிக கலோரிகொண்ட ஆரோக்கியமற்ற உணவைஉட்கொள்கின்றனர். இதனால் இதய நோய் ஏற்படும்அபாயம் அதிகமாக வாய்ப்பு ஏற்படுகிறது என்று கூறினர்.

குளிர்காலத்தில் ஏற்படும் அபாயம் இதய நோய் யாருக்குஅதிகம்?1. வயதானவர்கள் – குறைந்த உடல் இடையைபெற்றவர்கள், கடுமையான குளிரைத் தாங்கமுடியாது. எனவே, இது இதய நோய்க்குவழிவகுக்கிறது.2. ஏற்கனவே இதய பிரச்சனை உள்ளவர்கள் – குளிர்காலத்தில் இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம்.3. புகைபிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்கள் – இதய நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.4. வழக்கமான உடற்பயிற்சிகளைத் தவிர்பவர்களுக்குஇதயநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

குளிர்காலத்தில் இதய பிரச்சனைகளை தவிர்ப்பதுஎப்படி?1. கடும் குளிர் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவும். அப்படியே, நீங்கள் வெளியே செல்லவிரும்புகிறீர்கள் என்றால், வெப்ப ஆடைகளைஅணிந்துகொள்ளவும், ஸ்வெட்டர்கள், கையுறைகள், காலுறைகள் மற்றும் காலணிகளால் உங்களைமூடிக்கொள்ளுங்கள்.2. இந்த குளிர் காலத்தில் கடுமையானஉடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்கவும்.3. குளிர்காலத்தில் இதய பரிசோதனை செய்வதுஅவசியம்.4. குளிர்காலம் ஃப்ளூ காய்ச்சலை ஏற்படுத்துகிறது, இதனால் சுவாசபிரச்சனைகள் இதய நோய்க்கானவாய்ப்பை அதிகரிக்கலாம். எனவே, இந்தபருவத்தில் ஃப்ளூ தடுப்பூசியை  எடுத்துக்கொள்வதுஇதய நோய்களைத் தடுக்க உதவும்.5. குளிர்காலத்தில் புகைபிடித்தல் மற்றும் மதுஅருந்துவதை தவிர்க்கவும். ஏனெனில் இது மிகவும்ஆபத்தானது மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம்அதிகம் உள்ளது.

டாக்டர்.ஏ.ஈஸ்வரன் மற்றும் டாக்டர்.கே.கார்த்திக் ஆகியோர் குளிர்காலத்தில் இதய நோய் அபாயத்தை தவிர்க்க, கொடுக்கப்பட்ட பரிந்துரைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.

மேலும் விவரங்கள் மற்றும் தெளிவுகளுக்கு, 0422 – 2226222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லதுinfo@kumaranmedical.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குமின்னஞ்சல் செய்யவும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *