கல்யாண் ஜூவல்லர்ஸ் கூடுவாஞ்சேரி மற்றும் புரசைவாக்கத்தில் நடிகர் பிரபு திறந்து வைத்தார்

0ea7e85c-84ec-4886-9340-096e32fd8d8e

சென்னை, ஜன- கல்யாண் ஜூவல்லர்ஸோடு இணைந்து செயல்படும் கேண்டிரி லைஃப் ஸ்டைல் பிராண்ட் ஷோரூமில், உலகத் தரமான சூழலில் சிறப்பான வாடிக்கையாளர் சேவையுடன் கூடிய ஷாப்பிங் அனுபவத்தை சென்னை மக்களுக்கு வழங்குகிறது.

சென்னை, ஜன- 30, இந்தியாவின் முன்னணி நகை பிராண்டும், மக்களிடம் பெரும் நம்பகத்தன்மையைப் பெற்றதுமான கல்யாண் ஜூவல்லர்ஸ், சென்னையின் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையிலும், புரசைவாம் மில்லர்ஸ் சாலையிலும் தனது இரண்டு புதிய ஷோரூம்களைத் திறந்துள்ளது.

கல்யாண் ஜூவல்லர்ஸ் லைஃப் ஸ்டைல் ப்ராண்டான கேன்டிரியின் விற்பனை நிலையமும் கூடுவாஞ்சேரி விற்பனை நிலையத்துடன் சேர்ந்து இன்று திறக்கப்பட்டது. கல்யாண் ஜூவல்லர்ஸின் விளம்பரத் தூதர், நடிகர் பிரபு கணேசன் இந்தப் புதிய ஷோரூம்களைத் திறந்துவைத்தார். வாடிக்கையாளருக்கான சேவைகளுடன் விதவிதமான வடிவமைப்புகள் கூடிய நிறைவான ஷாப்பிங் அனுபவத்தை கல்யாண் ஜூவல்லர்ஸ், கேண்டியர் இரண்டும் வழங்கும்.

கல்யாண் ஜூவல்லர்ஸ் பிராண்டின் விளம்பரத் தூதுவர் பிரபு பேசும்போது , “சென்னையில் கல்யாண் ஜூவல்லர்ஸின் இரண்டு புதிய விற்பனை நிலையங்களை இன்று திறப்பதில் அளப்பறிய மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். கல்யாண் ஜூவல்லர்ஸுடனான என்னுடைய கூட்டுறவு ஆரம்பத்திலிருந்து உள்ளது. எங்களது இந்த உறவு தொடங்கி இன்றுவரை அவர்களது குறிப்பிடத்தகுந்த வளர்ச்சிப் பயணத்தைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன். நம்பிக்கை, வெளிப்படைத் தன்மை, வாடிக்கையாளர் திருப்தி தொடர்பான அவர்களது அர்ப்பணிப்பில் மற்ற எல்லாரையும் விடத் தனித்து உயரத்தில் நிற்கிறார்கள். எங்களது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு தங்கள் ஆதரவைத் தருவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸ் செய்யும் ஒவ்வொரு நகையிலும் இருக்கும் அர்த்தம், அற்புதத்தை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கொண்டாடுகின்றனர்.

கல்யாண் ஜூவல்லர்ஸின் செயல் இயக்குனர் ரமேஷ் கல்யாணராமன் பேசும்போது, “ஒரு நிறுவனமாக, வாடிக்கையாளர்களின் நகை வாங்கும் அனுபவத்தை மேம்படுத்தி ஒரு முழுமையான ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்குவதில் பெரிய முயற்சிகளை எடுத்து மகத்தான மைல்கற்களை எட்டியுள்ளோம். நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையே எங்கள் பிராண்டின் அடிப்படை தத்துவமாக இருந்து வருகின்றன. அதை எதற்காகவும் விட்டு கொடுக்காமல் நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். கல்யாண் ஜூவல்லர்ஸில் நுட்பமும் தனித்துவமும் கூடிய நகை வடிவமைப்புகளை தரம், இணையற்ற சேவை உறுதிப்பாடுடன் தொடர்ந்து அளிப்போம் என்று உறுதி கூறுகிறோம்.”

About Author