ஒரு புதுமையான முனைப்புத்திட்டத்தின் வழியாக அடையார் பகுதியையும் மற்றும் அதன் மக்களையும் கொண்டாடி கௌரவிக்கும் ஃபெடரல் வங்கி

இந்தியாவின் பிரபல வங்கிகளுள் ஒன்றான ஃபெடரல் வங்கியின் அடையார் கிளை, “எனது பெயர் அடையார், அடையார் தான் நான்” (“I am Adyar, Adyar is me”) என்று பெயரிடப்பட்ட ஒரு தனித்துவமான செயல்திட்டத்தின் வழியாக சென்னை மாநகரின் மிக முக்கியப் பகுதியான அடையார் மற்றும் அதன் மக்களை கௌரவித்து கொண்டாடியது. அடையாரில் அமைந்துள்ள ஃபெடரல் வங்கி கட்டிடத்தின் சுவர்கள், இப்பகுதியின் துடிப்பான, உயிரோட்டம் மிக்க உணர்வை பிரதிபலிக்கும் வகையில் வண்ணம் தீட்டப்பட்டு மிளிர்ந்தன.

அடையார் பகுதியின் அமைவிடங்களையும் மற்றும் இங்கு வாழ்ந்த மற்றும் தற்போது வாழ்கின்ற மக்களின் கதைகளையும் அழகாக கட்சிப்படுத்துகின்ற ஒரு கலை, ஓவிய கண்காட்சி நிகழ்வும் வங்கிக்கிளையில் நடைபெற்றது. சென்னை மாநகர காவல்துறையின் துணை ஆணையர் – போக்குவரத்து திரு. சமாய் சிங் ஐபிஎஸ், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ஃபெடரல் வங்கியின் ஹோல்சேல் வங்கி சேவை பிரிவின் தேசிய தலைவரும், குரூப் தலைவருமான திரு. ஹர்ஷ் துகார், முதுநிலை துணைத்தலைவரும், சென்னை மண்டல தலைவருமான திரு. இக்பால் மனோஜ், தலைமை சந்தையாக்கல் அதிகாரி திரு. MVS மூர்த்தி, துணை உதவி தலைவர் 1 மற்றும் சென்னை பிராந்திய தலைவர் பெட்டி ஆன்டனி ஆகியோர் முன்னிலை வகித்த இக்கொண்டாட்ட நிகழ்வில் வங்கியின் பணியாளர்கள், பிற சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.

About Author