Show on front: page Page on front ID: 570 ஐஸ்டீல் நிறுவனம், ஐஸ்டீல் ஜிங்க் அறிமுகம் செய்துள்ளது, அடுத்த தலைமுறை கேல்வனைஸ் செய்யப்பட்ட XLS TMT கம்பிகள், கட்டுமானங்களுக்கு மூன்று மடங்கு நீண்ட ஆயுளை வழங்குகிறது

ஐஸ்டீல் நிறுவனம், ஐஸ்டீல் ஜிங்க் அறிமுகம் செய்துள்ளது, அடுத்த தலைமுறை கேல்வனைஸ் செய்யப்பட்ட XLS TMT கம்பிகள், கட்டுமானங்களுக்கு மூன்று மடங்கு நீண்ட ஆயுளை வழங்குகிறது

d1f9c198-f9f1-4769-893f-b5a7533e43d4

சென்னை, மார்ச் 2024: தென்னிந்தியா முழுவதும் பிரீமியம் TMT கம்பிகள்-க்கு இணையான பிராண்டான ஐஸ்டீல்-ஐ சந்தைப்படுத்தும் விக்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பாரம்பரிய TMT கம்பிகளை விட மூன்று மடங்கு அதிக ஆயுளை வழங்கும் புதிய துத்தநாகம் (ZINC) பூசப்பட்ட TMT கம்பிகளான ஐஸ்டீல்ல் ஸிங்க்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

மேம்படுத்தப்பட்ட கேல்வனைசிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஐஸ்டீல்ல் ஸிங்க் 50 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கடலோரப் பகுதிகள், நீர்நிலைகள் மற்றும் தொழில்துறை மண்டலங்களுக்கு அருகிலுள்ள இடங்கள் போன்ற அரிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் நடைபெறும் கட்டுமானங்களுக்கு மிகவும் பொருத்தமானது. இந்த துத்தநாக பூச்சு அரிப்புக்கு எதிராக நம்பகமான பாதுகாப்பை வழங்குகிறது. இது கடலோர அல்லது ஈரப்பதமான சூழலுக்கு சரியானதாக உள்ளது. இது ஆய்வக சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது கடலோரப் பகுதிகளில் கட்டுமானத்திற்கு இன்றியமையாதது. மேலும் அடித்தளங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு ஐஸ்டீல்ல் ஸிங்க், கேல்வனைஸ் செய்யப்பட்ட XLS TMT கம்பிகள் ஒப்பிடமுடியாத ஆயுள் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. கேல்வனைஸ் செய்யப்பட்ட ஸ்டீல் காலத்துக்கேற்ற பரிசோதனையாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா, நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பாலம் மற்றும் புது டெல்லியில் உள்ள லோட்டஸ் கோயில் போன்ற நினைவுச்சின்னமான கட்டமைப்புகள் அதன் நீடித்த நம்பகத்தன்மைக்கு சான்றாக உள்ளன

இதன் அறிமுக விழாவில் எல்.புகழேந்தி, இந்தியா லீட் ஸிங்க் டெவலப்மென்ட் அசோசியேஷன் நிர்வாக இயக்குநர், புதுடெல்லி, டாக்டர் டி. வேணுகோபால், டாடா ஸ்டீல் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, டாக்டர் ஏ.ஆர். சாந்தகுமார், சென்னை ஐஐடியின் முன்னாள் எமரிட்டஸ் பேராசிரியர் மற்றும் திரு. டி.வி.சுப்பிரமணியம், ஐஸ்டீல் நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு தலைவர் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

அறிமுக விழாவில் பேசிய விக்கி இண்டஸ்ட்ரீஸ் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஜி.கௌதம் ரெட்டி, கூறுகையில், ‘’ஐஸ்டீல் ஸிங்க் கண்டுபிடிப்பு எங்கள் முக்கிய நோக்கத்துக்கு ஏற்ப உள்ளது. இது தனித்துவமான கட்டுமானப் பொருட்களை உருவாக்குவதற்கு முன்னோடியாக உள்ளது. இதனால், நாம் சென்றடையும் ஒவ்வொரு வீட்டையும் பாதுகாக்கிறது. இந்த புதிய தயாரிப்பு கட்டுமானப் பொருட்களின் தரத்தை மறுவரையறை செய்வதற்கும், நாட்டின் கட்டுமானம் நடைபெறும் இடப்பரப்பை மாற்றியமைப்பதற்குமான தன்மையை கொண்டுள்ளது. ஐஸ்டீல் ஸிங்க், கேல்வனைஸ் செய்யப்பட்ட XLS TMT கம்பிகள் மூலம் கட்டப்படும் கட்டிடங்கள் 150 ஆண்டுகள் வரை ஆயுளை எதிர்பார்க்கலாம். வழக்கமான TMT கம்பிகளை கொண்ட கட்டிடங்களின் ஆயுள்காலம் 50 ஆண்டுகள் ஆகும்.

About Author