எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ல் 1½ வயதே நிரம்பிய குழந்தைக்குABO-இணக்கமற்ற இதய உறுப்புமாற்று சிகிச்சை
சென்னை, 2023, ஆகஸ்ட் 22- சென்னையின் புகழ்பெற்ற மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர், இரத்தப்பிரிவு என்ற தடையை கடந்து, ABO-இணக்கமற்ற குழந்தைக்கான உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருப்பதை பெருமையுடன் அறிவித்திருக்கிறது. உறுப்புமாற்று அறுவைசிகிச்சைக்கு முன்பு 1½ வயதான இக்குழந்தைக்கு இதயத்தம்பம் (கார்டியாக் அரெஸ்ட்) எனப்படும் நிகழ்வுகள் பலமுறை நிகழ்ந்திருக்கின்றன. இதயத்தம்பம் பாதிப்பு நிகழ்ந்த ஒவ்வொருமுறையும் பச்சிளங்குழந்தையான இந்நோயாளி, டாக்டர். கே.ஆர். பாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர். சுரேஷ் ராவ் கேஜி மற்றும் அவர்களது குழுவினர் மிக எச்சரிக்கையாக கையாண்டு இதய செயல்பாட்டை சீராக்கி இருந்த நிலையில் இப்போது ஒரு ABO-இணக்கமற்ற குழந்தைக்கான உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கின்றனர்.
எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் இதய மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று பிரிவு மற்றும் இயந்திர சுழற்சி முறை ஆதரவு பிரிவின் இணை இயக்குநர் டாக்டர். கேஜி சுரேஷ் ராவ் பேசுகையில், ‘‘உலகளவில் சிறந்த மருத்துவ நிபுணத்துவம் மற்றும் மிக நவீன புத்தாக்க கட்டமைப்பு வசதி ஆகியவற்றின் ஒருங்கிணைவில் கிடைக்கும் சக்தியையும், பலனையும் வெற்றிகரமான இந்த சிகிச்சை விளைவு சுட்டிக்காட்டுகிறது. இக்குழந்தைக்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்கியிருப்பதில் ஒரு முக்கிய பங்கை ஆற்றியிருப்பது குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொது வார்டுக்கு மாற்றப்படும் அளவிற்கு இக்குழந்தை குணம் பெற்றிருப்பது மருத்துவத் தொழில்நுட்பத்தில் எட்டியிருக்கும் சிறப்பான வளர்ச்சிக்கு சாட்சியமாகத் திகழ்கிறது’’ என்று கூறினார்.