எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில்குழந்தைகளுக்கான மிக நவீன எக்மோ சிகிச்சை மையம் ஆரம்பம்

8720f04b-b8ab-4450-828b-c3d6c2ff9fce

சென்னை, 2023, ஜுலை: தமிழ்நாட்டில் உயர்சிகிச்சைக்கான பன்முக சிறப்பு மருத்துவமனைகளுள் முதன்மை வகிக்கும் சென்னையின் எம்ஜிஎம் ஹெல்த்கேர் குழந்தைகளுக்கான மற்றும் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான எக்மோ சென்டரை இன்று திறந்திருக்கிறது. எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் இதய அறிவியல் மையத்தின் தலைவரும், இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை & இயந்திர இயக்க சுழற்சி ஆதரவு மையத்தின் இயக்குநருமான டாக்டர். கே.ஆர். பாலகிருஷ்ணன் மற்றும் அதன் இணை இயக்குநர் டாக்டர். சுரேஷ் ராவ், எம்ஜிஎம் ஹெல்த்கேர் குழும தலைமைசெயல் அலுவலர் திரு. ஹரீஷ் மணியன், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவின் முதுநிலை நிபுணர் மற்றும் கிளினிக்கல் லீடு டாக்டர். கலைமாறன் சதாசிவம், குழந்தை மருத்துவம் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சையியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். பினு நினான் மற்றும் எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் டிஎம்எஸ் டாக்டர். ஆனந்த் மோகன் பை ஆகியோர் இப்புதிய சிகிச்சை மைய தொடக்கவிழாவின்போது கலந்துகொண்டனர்.

எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் இதய அறிவியல் மையத்தின் தலைவரும், இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை & இயந்திர இயக்க சுழற்சி ஆதரவு மையத்தின் இயக்குநருமான டாக்டர். கே.ஆர். பாலகிருஷ்ணன் இந்நிகழ்வில் கூறியதாவது, “எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ல் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்காக மையப்படுத்தப்பட்ட எக்மோ மையத்தை நாங்கள் தொடங்கும் இன்றைய தினம், சிறார்களுக்கான உயிர்காப்பு தீவிர சிகிச்சை சேவையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கிறது. மிக நவீன மருத்துவ சிகிச்சை சேவைகள் அதுவும் உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகளுக்கு உயிரை காக்கும் ஆதரவின் வெற்றிகரமாகத் திகழும் எக்மோ தொழில்நுட்பத்தை வழங்குவது மீது நாங்கள் கொண்டிருக்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கு நேர்த்தியான எடுத்துக்காட்டாக தொடங்கப்பட்டிருக்கும் இந்த எக்மோ மையம் திகழ்கிறது. இம்மையத்தை நிறுவியிருப்பதன் மூலம் கடும் பாதிப்பிலிருந்து மீண்டு குணம் பெறுவதற்கும் நம்பிக்கை தரும் சிறப்பான எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை இந்த இளம் நோயாளிகளுக்கு வழங்குவதற்குமான எமது குறிக்கோளையும், செயல்திட்டத்தையும் நாங்கள் மறு உறுதிசெய்திருக்கிறோம்.என்றார

.

About Author