உலக கடற்கரை சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கடற்கரையில் உள்ள பிளாஸ்ட்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் நிகழ்சி

0

உலக கடற்கரை சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு குஜராத் முதல் கொல்கத்தாவரை உள்ள 7500 கி/மீ தூர பாரதேசத்தின் கடற்கரையில் உள்ள பிளாஸ்ட்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் நிகழ்சிநடைபெற்று வருகிறது இந்நிகழ்வின் ஒருபகுதியாக சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசபுரம் பகுதி கடற்கரையை மக்களால் சுத்தம்செய்யும் நிகழ்ச்சி மற்றும் பண விதைகளை நடும் நிகழ்ச்சி சமூக ஆர்வலர்களால் இன்று நடைபெற்றது சென்னை அசோக் நகர் சேர்ந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்சிசி மாணவிகள் அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக்க கழிவுகளை மற்றும் குப்பைகளை எடுத்து சுத்தம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் பரிய சம்ரச்சனாகதி விதி அமைப்பின் பொறுப்பாளர் தங்கபாண்டியன் செய்தியாளரிடம் கூறுகையில”உலக கடற்கரை சுத்திகரிப்பு தினத்தை ஒட்டி இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்உள்ள குப்பைகளை சுத்தம் செய்து மட்டும் அல்லாமல் 2 இலட்சம் பனை விதைகள் நடவு செய்யும் துவக்க நிகழ்ச்சியாக இன்று ஆரம்பித்துள்ளோம் .பனைநடும் துவக்க விழாவை சன்னியாசிகள் சங்க சுவாமி ஜி ஸ்ரீ சதானந்த சரஸ்வதி மற்றும் மாதா அமிர்தானந்தம்மை மடம் வ நிர்வாகி சுவாமி ஸ்ரீ வினையானந்தாஅவர்கள் துவக்கி வைத்தது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது மேலும் பனைமரம் ஒரு கர்ப்ப மரமாகும் நிகழ்ச்சியை தொடர்ந்து 18 நாட்கள் கிழக்கு கடற்கரை சாலையில் பண விதைகளை நடவு உள்ளோம் எனவும் பொதுமக்கள் பனைமரத்தை நட்டு அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தால்நோய் நொடியின்றி மக்கள் வாழ்வோம் மேலும்இந்த தூய்மை பணியில் சேவை செய்த என்சிசி மாணவிகள் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது காவல் படைகுழு ஆகியோர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பாக நன்றி கூறுகிறோம் “என தெரிவித்தார். இந்து நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மாம்பழ மண்டல சுய சேவை செயலாளர் ராமானுஜம் ,அரிமா சங்க சிங்கார சென்னை மண்டல செயலாளர் மாதவ கிரி .மக்கள் கட்சி பாரதமாதா செந்தில்,சமூக சேவகர்துளசிராமன் , ஜெய் ஹிந்த இலவச நீட் பயிற்ச்சிமைய தாளாளர் சந்திரசேகர், எக்ஸ்னோரா இண்டர் நேசனல் செந்தில் பாரி, பாபு,சாமிராஜா மற்றும் தமிழ்நாடு முடிதிருத்துவோர் மற்றும் மருத்துவர் சங்க மாநில செயலாளர் .இராஜா பிலிம் ப்ரொடியூசர் திரைப்பட இயக்குனர் தயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *