இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் திட்டம் கோயம்புத்தூர்-ஷீரடி ஆன்மீக சுற்றுலாப் பயணம்!

0
F8F263A6-06AF-481F-922D-1AFEA8D06538

இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ள பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ். கோயம்புத்தூரில் இருந்து ஷீரடிக்கு ஆன்மீக சுற்றுலாப் பயண அறிவிப்பு. பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ், தனியார்-அரசு பங்களிப்புடன் இயக்கப்படும் முதல் ரயில் சேவை.

கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு, சேலம், பெங்களூர், மந்த்ராலாயம் வழியாக ஷீரடிக்கு செல்லும் இந்த பயணத்தில், ஒரே கட்டணத்தில், 4 நாட்களுக்கான உணவு மற்றும் ரயில் பயணத்திற்கு தேவையான படுக்கை விரிப்புகள், தலையணை, போர்வை, கிருமி நாசினி உள்ளிட்ட தினசரி பயன்பாட்டு பொருட்கள், ஷீரடியில் போக்குவரத்து வசதி, வியாழக்கிழமை சாய் தரிசனம், தரிசனத்திற்கான கட்டணம் என அனைத்தும் வழங்கப்படும்.

இரண்டு அடுக்கு ஏசி மற்றும் உயர்தர வசதிகளைக் கொண்ட இந்த வாராந்திர ரயில் பயணம், செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி வெள்ளிக்கிழமை மாலை முடிவடையும்.

அவசர மருத்துவ தேவைகளுக்காக ஒரு மருத்துவர் ரயிலில் பயணிப்பார். பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பயணிகள் சேவை அதிகாரி மற்றும் பயணி உதவியாளர்கள். மந்த்ராலாயம் மற்றும் ஷீரடிக்கு அனுபவமிக்க வழிகாட்டிகள். சுத்தமான, சுகாதாரமான ரயில்வே கோச்சுகள் மற்றும் கழிப்பறைகள்.

கோயம்புத்தூரை தொடர்ந்து சென்னை, மதுரை, கன்னியாகுமரி மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும் ஆன்மீக குடும்ப சுற்றுலாப் பயணங்களை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். வருங்காலத்தில் காசி, ராமேஸ்வரம், திருப்பதி, கயா மற்றும் புனித மாநிலமான உத்தரகாண்ட்க்கும் தொடங்க உள்ளோம். என்று கூறினார்
பயணத்திற்கான முன்பதிவு / தகவல்களுக்கு : saisadanxpress.com / 93718 66666 / 93719 66666

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *