இந்தியன் வங்கியின் நிகர லாபம் 62 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் எஸ் எல் ஜெயின் தெரிவித்தார்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது இந்தியன் வங்கியின் நிகர லாபம் 62 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் எஸ் எல் ஜெயின் தெரிவித்தார்

இந்தியன் வங்கியின் UPI மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் 34 % – ல் இருந்து 65% உயர்ந்துள்ளது இந்தியன் வங்கி

இந்தியன் வங்கியின் மொத்த பண பரிவர்த்தனைகள் 86 சதவீதம் டிஜிட்டல் பரிவர்த்தனையாகவே செயல்படுகிறது

சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த அரை ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் எஸ் எல் ஜெயின் பங்கேற்று இந்த அறிக்கையை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது இந்தியன் வங்கியின் நிகர லாபம் 62 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

அதாவது கடந்த ஆண்டு செம்படம்பர் (2022) ல் 1,225 கோடியாக இருந்த நிகர லாபம் இந்த ஆண்டு (2023) செப்டம்பரில் 1,988 கோடியாக அதிகரித்து நிகர லாபம் 62 சதவீதம் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல் செப்டம்பர் மாதம் 2022ல் 10,26,801 கோடியாக இருந்த இந்தியன் வங்கியின் மொத்த வர்த்தக மதிப்பு செப்டம்பர் மாதம் 2023 ல் 10 சதவீதம் அதிகரித்து 11,33,091 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மொபைல் பேங்கிங் உபயோகிக்கும் பயனாளர்களின் எண்ணிக்கை 47 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், UPI மற்றும் ஆன்லைன் பண வர்த்தனை பயனாளர்கள் 34 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார். இந்தியன் வங்கியின் பண பரிவர்த்தனையில் 86 சதவீதம் டிஜிட்டல் பரிவர்த்தனையிலே செயல்படுகிறது.

இந்த காலாண்டு முதல் அரையாண்டு வரை உள்ள நிகர லாபம் அதாவது ஜூன் 2023 ல் 1709 கோடியிலிருந்து செப்டம்பர் 2023 ல் 1988 கோடியாக அதிகரித்து 16 சதவீதம் உயர்ந்துள்ளது

About Author