அப்போலோ மருத்துவமனைகள் இரைப்பை குடல் இரத்த போக்கு நோய்களுக்கான நவீன சிகிச்சை மையத்தைத் தொடங்குகிறது!

eef7f86e-1d00-4fb9-a27d-552b76fbf405

சென்னை, செப்டம்பர் 2023 : அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தனது 40-வது ஆண்டு நிறைவையொட்டி, இரைப்பை குடல் கோளாறுகள் தொடர்பான (GI-related ailments) நோய்கள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக மருத்துவத்துறையிலேயே மிக சிறந்த விளங்கும் வகையில், இரைப்பை குடல் இரத்தப் போக்கு (Gastro-Intestinal Bleed) தொடர்பான சிகிச்சைக்கான மேம்பட்ட மையத்தை தொடங்கியுள்ளது.

இரைப்பை குடல் கோளாறு தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பலனை அளிக்கும் வகையில், சர்வதேச வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப இங்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த மையமானது திறமையான, நிபுணத்துவமிக்க மருத்துவ நிபுணர்கள் குழுவால் செயல்படுத்தப்படுவதுடன், செரிமான மண்டலத்தின் கோளாறுகள் தொடர்பாக விரைந்து நோயை கண்டறியும் மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் உயர்தர சிகிச்சையை அளிப்பதற்காக அதிநவீன உள்கட்டமைப்புகளுடன் உருவாக்கப்படும். இந்த மையத்தில் உணவுக் குழாய், வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், கணையம், கல்லீரல், பித்தப்பை, பித்த சுரப்பிகள் அமைபபு பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்

அப்போலோ மருத்துவமனை குறித்து
1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மிகப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டார். அப்போது இந்தியாவில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று ஆசியாவிலேயே மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அதில், உலகம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 72 மருத்துவமனைகள், சுமார் 5000 மருந்தகங்கள், 400-க்கும் அதிகமான கிளினிக்குகள், 1228 மருத்துவ பரிசோதனை மையங்கள், 700-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சி அறக்கட்டளை என உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல் புரோட்டான் சிகிச்சை மையத்தை நிறுவுவதற்காக அண்மையில் முதலீடு செய்துள்ளது.
ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும், ஒரு மில்லியன் பேருக்கு அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் சிகிச்சை அளிக்கிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் உலகத் தரத்திலான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அதன் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ல் அப்போலோ மருத்துவமனைகள் தலைவர், டாக்டர் பிரதாப்.\ .சி. ரெட்டிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.
கடந்த 40 ஆண்டுகளாக, மருத்துவ ஆராய்ச்சிகள், சர்வ தேசத் தரத்திலான மருத்துவ சேவைகள், அதி நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தொடர்ந்து சிறந்து விளங்குவதுடன் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது. மருத்துவ சேவைகளுக்காக நாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தர வரிசையில் அதன் மருத்துவமனைகள் முன்னணியில் இருந்து வருகின்றன. என்றார்

About Author