அனைத்திந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் ஒன்பதாவது மாநில மாநாடு மற்றும் முப்பெரும் விழா

86efcb45-fad8-4293-9b18-578fc3b3fd8a

அனைத்திந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியயீட்டாளர் சங்கத்தின் 9வது மாநில மாநாடு
மற்றும் முப்பெரும் விழா மறைந்த மற்றும் நலிவடைந்த பத்திரிக்கையாளர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேசியத் தலைவர் லயன் டாக்டர்
. S ராஜேந்திரன் அவர்கள் தலைமையில்
சென்னை தியாகராய நகரில் உள்ள சர்பிட்டி தியாகராய அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு நலிந்த பத்திக்கையாளர்கள் குடும்பங்களுக்கு தையல் எந்திரங்கள், மற்றும் உதவித்தொகை போன்ற பல்வேறு உதவிகள் வழங்கினார். பின்பு மாநாட்டில் வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு கொண்டு செல்வதாகவும் சட்டமன்றத்தில் உங்கள் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில்
என்.எம்.சி. சேர்மன் சுரேஷ் கதம், என் எம் சி. தலைவர் நியூ டெல்லி
ருனு ஹாசாரீகா,
பொதிகை தொலைக்காட்சியின் முன்னாள் துணை இயக்குனர் விஜயன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார்,
ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன், நீதியின் குரல் நிறுவனத் தலைவரும் மக்கள் தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்
சி.ஆர்.பாஸ்கர், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஆ.ஹென்றி,
கிங் மேக்கர் நிறுவனத்தின்
தலைவர் ராஜசேகர், சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயலாளர் சி விமலேஸ்வரன், இந்திய குடியரசு கட்சி பொதுச் செயலாளர் அன்புவேந்தன், கல்வியாளர் இ.கே.டி சிவகுமார், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் எஸ்.பாஸ்கர், கட்டுமான தொழில் மாத இதழ் ஆசிரியர் சிந்து பாஸ்கர், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் செய்தி அலசல் குழுமத்தின் நிருபர்கள் புகைப்பட கலைஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

About Author