ஹெச்சிஎல் அறக்கட்டளை மற்றும் ஸ்டான்லி ப்ளாக் அண்டு டெக்கர் இந்திய இளைஞர்களை தயாரிப்பு துறையில் வேலைக்கு தயார் செய்யவிருக்கிறது

சென்னை மற்றும் புனே, இண்டியா, அக்டோபர் 9, 2023-, இந்தியாவில் ஹெச்சிஎல்டெக்கின் கார்பரெட் சமூக பொறுப்பு நிகழ்ச்சி நிரலை அளிக்கும், ஹெச்சிஎல் அறக்கட்டளை , இந்திய இளைஞர்களை தயாரிப்பு துறையில் வேலைக்கு அமர்த்தப்படக்கூடியவர்கள் ஆக்குவதற்கான திறன்களை அவர்களுக்கு அளிப்பதற்கு டூல்ஸ் மற்றும் வெளிப்புற பவர்டு சாதனங்களில் உலகளவில் தலைமை வகிக்கும் ஸ்டான்லி ப்ளாக் அண்டு டெக்கருடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (எம்ஓயு) கையெழுத்திட்டிருக்கிறது,

ஸ்டான்லி ப்ளாக் அண்டு டெக்கர், அரசாங்கம்-நடத்தும் இரண்டு தொழில் துறை பயிற்சி நிறுவனங்கள் (ஐடீ ஐகள்) – புனேவில் உள்ள ஐடீஐ மொர்வாடி மற்றும் சென்னையில் உள்ள ஐடீஐ கிண்டியில் பயிற்சி மற்றும் மேம்பாட்டு மைய்யங்களை நிறுவும் – இதில் ஹெச்சிஎல் அறக்கட்டளை பவர் டூல்ஸ் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை செயல்படுத்தும் .

வருடந்தோறும் தோராயமாக 1,000 இளைஞர்கள் இந்த ஒருங்கிணைப்பிலிருந்து பலன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஐடீஐ பயிற்சி அளிப்பவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சியும் வழங்கும், இது அவர்களை சமீபத்திய மார்கெட் தொழில் நுட்பங்களுடன் சீரமைக்கும். தொழில்களுக்கு கூடுதல் முயற்சியுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், தொழில்நுட்ப விருந்தினர் விரிவுரைகள், வேலைக்கான சந்தைகள் மற்றும் மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்படும்.

About Author